எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 26 காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் ஜூலை 2-ஆம் தேதி டில்லியில் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர் பான அறிவிக்கை அரசிதழில் ஜூன் 1-ஆம் வெளியிடப்பட் டது. இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு கடந்த ஜூன் 22-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட் டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலை வர் மசூத் உசைன் நியமிக்கப் பட்டார்.

முதலாவது கூட்டம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் ஆணையத்தின் தலை வர் மசூத் உசைன் தலை மையில் டில்லியில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 2) நடைபெறும் என மத்திய நீர் வளத் துறை செயலர் யு.பி. சிங் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்த ஆணையத்தின் முத லாவது கூட்டத்தில் மத்திய நீர் ஆணையம், தேசிய நீரியல் நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய வற்றின் பிரதிநிதிகள் பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட மாற் றத்தின்படி காவிரியைச் சார்ந் துள்ள மாநிலங்களுக்கான நீர் பங்கீடு தொடர்பாக விரிவான விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உறுப்பினர்களை அறிவித்தது கருநாடகம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற் றுக் குழு ஆகியவற்றில் இடம் பெறும் உறுப்பினர்களின் பெயர் களை கருநாடக மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் குமார சாமி தலைமையில் கலந்தாய் வுக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக் குமார் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக செயல் பட்டுள்ளது. எங்களது எதிர்ப் பைப் பதிவு செய்யும் அதே நேரத்தில், கருநாடகத்துக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்பதற்காக மேலாண்மை ஆணையத்தின் கருநாடக பிரதிநிதியாக நீர்வளத் துறை முதன் மைச் செயலர் ராகேஷ் சிங்கை யும், ஒழுங்காற்றுக் குழுவின் கருநாடக பிரதிநிதியாக காவிரி நீர்ப் பாசன நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எச்.ஆர். பிரசன்னகுமாரையும் பரிந்து ரைக்க முடிவெடுத்துள்ளோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner