எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 26- மாநில கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து எதுவும் வரவில்லை. முதல்வர் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வது உறுதி என முன்னாள் பிரதமரும் மஜதவின் தேசிய தலைவருமான தேவகவுடா கூறினார்.

இது குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறுகையில்,கர்நாடக மாநிலத்தில் மத வாத கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே எங்களின் நோக்கமா கும். தேர்தல் முடிவுகள் வெளி யான உடனே ஆப்ரேசன் தாமரை திட்டத்தை பாஜகவினர் அமல் படுத்தும் நோக்கத்தில் நடந்து கொண்டனர். காங்கிரஸ் மற் றும் மஜதவை சேர்ந்த எம்எல் ஏக்கள் பதவியேற்பதற்கு முன்பே பாஜகவினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டாலும் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. எம்எல்ஏ பதவியேற்ற பிறகு விப் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தால் கட்சி தாவல் சட்டம் பாயும் என்பதால் பாஜகவினர் அமைதியாகிவிட்டனர். அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் மஜத இடையே கூட்டணி அமைந் தது.

மதவாத கட்சியை ஆட்சி யில் அமர்த்தக்கூடாது என்பதே எங்களின் திட்டமாகும். தற் போது புதிய  பட்ஜெட் தாக்கல் செய்வதில் குழப்பத்தை ஏற் படுத்த பாஜவினர் முயற்சி செய்கிறார்கள். முன்னாள் முதல் வர் சித்தராமையா கூறியதை நாங்கள் பெரிதுபடுத்த விரும்ப வில்லை. அவரின் அனுப வத்தை வெளிப்படுத்தியுள்ளார். சித்தராமையாவின் கருத்தினால் கூட்டணிக்கு ஆபத்து ஏற்படாது. கூட்டணி ஆட்சி கலைந்து விடாது.

இந்த பிரச்சினையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள் வோம். முதல்வர் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார். இதில் மாற்றம் கிடையாது. இவ்வாறு முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner