எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை,ஜூன்28மார்க்சிஸ்ட்கம்யூ னிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்சீதாராம் யெச்சூரி சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடன தினத்தை கடை பிடித்து, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மட்டுமே இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவசர நிலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்தபோது அதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துரோகம் இழைத்தது. ஆனால் இப்போது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரும்,பா.ஜ.க. வினரும் அவசர நிலையை எதிர்த்து தீவிரமாக போராடியதாகவும், ஜனநாய கத்தை மீட்டெடுத்த பெருமை தாங் களையே சாரும் என்றும் பெருமை கொள்கிறார்கள்.

உண்மையிலேயே ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை நாட்டு மக்க ளையே சாரும். நிர்வாக ரீதியாக அவசர நிலையை மக்கள்மீது மத்திய அரசு திணிக்கிறது. அவசர நிலையின்போது நீதித்துறைக்கு எதிராக இந்திரா காந்தி என்ன செய்தாரோ அதையே தற் போதைய பா.ஜ.க. அரசும் செய்கிறது. மத்திய அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்தியுள்ளது. அரசி யல் சாசனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒவ் வொரு அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

அவசர நிலை அறிவித்தபோது அதற் கெதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் இருந்து போராடியதுபோல, தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திலும்எங்களதுகட்சிமுன் னணியில்இருக்கும்.அரசியல்சாசனத் தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை யும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாங் கள் தொடர்ந்து தீவிரமாக போராடு வோம். விவசாயிகளின் நிலங் களையும், பொதுமக்களின் வீடுகளையும் அழித்து சென்னை--சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது தேவை யற்றது.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து மத்திய, மாநிலக் குழு உரிய நேரத்தில் முடிவு எடுக்கும். மாநி லத்தில் இருந்து அ.தி.மு.க.வும், மத்தி யில் இருந்து பா.ஜ.க.வும் அகற்றப் படவேண்டும். அதற்கான குறிக்கோளை எட்டும் வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். மத்திய அரசின் அரசியல் ரீதியிலான நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தும் வகையில் தமி ழக ஆளுநர் செயல்படுவது கண்டனத் துக்குரியது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. ஜனநாயகம் இல்லாத சவுதி அரேபியா, ஏமன், சிரியா, ஈரான் போன்ற நாடுகள் கூட இந்தப்பட்டியலில் இந்தி யாவுக்கு அடுத்தபடியாகத்தான் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner