எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அலகாபாத், ஜூன் 29 -கும்பமேளாவையொட்டி அல காபாத் வரும் சாமியார்களுக் காக, சுங்கக் கட்டணத்தை நிறுத்தி வைக்க, உத்தரப்பிரதேச மாநில சாமியார் முதல்வர் ஆதித் யநாத் முடிவு செய்துள்ளார்.

அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், அரித்துவாரில் கங்கைநதிக் கரையிலும், நாசிக்கில் கோதா வரி கரையிலும், உஜ்ஜைனியில் சிப்ரா நதிக்கரையிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்து மதத்தைச் சேர்ந்த அம்மணச் சாமியார்கள் முதல் பல லட்சம் பொதுமக்கள் வரை, ஒரே சமயத்தில் ஆற்றில் உடலைக் கழுவும் ஒரு நிகழ்வாக கும்பமேளா இருக்கிறது. அந்த வகையில் அல காபாத் கும்பமேளா 2019ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ளதால், முன்னேற்பாட்டுப் பணிகளை- உத்தரப்பிரதேசத்தின் சாமியார் முதல்வரான ஆதித்ய நாத் இப்போதே துவக்கி விட்டார். கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, சாமியார்கள் கூட்டம் ஒன்றை நடத்திய ஆதித்யநாத், அதில் சாமி யார்கள் அளித்த ஆலோசனை யின் அடிப்படையில்- கும்ப மேளாவிற்கு வருவோருக்கு தங்குமிடம் ஏற்படுத்தித் தரு வது, ஹெலிகாப்டரை வைத்து சாமியார்கள் மீது மலர் மாறிப் பொழிவது என்பதுஉள்ளிட்ட முடிவுகளை எடுத்துள் ளார். முக்கியமாக சுமார் மூன்று மாதங்களுக்கு அலகாபாத் வரும் சாலைகளில் சுங்கக் கட்டண வசூலை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ள அவர், இதுதொடர்பான உத்தர வையும் தேசிய நெடுஞ்சாலைக் கழகத்திற்கு பிறப்பித் துள்ளாராம். இதன்படி, உத் தரப்பிரதேசத்திற்கு உட்பட்ட அலகாபாத் சாலைகளில் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம்  எதுவும் வசூலிக்கப்படப் போவதில்லையாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner