எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பி.ஜே.பி. கூட்டாளி சிவசேனா எச்சரிக்கை

மும்பை, ஜூன் 30 ''பிரதமர் மோடி நல்லது செய்வார் என்ற நம்பிக் கையிலிருந்து வெளியே வர வேண்டிய காலகட்டம் ஏற் பட்டுள்ளது'' என்று எச்சரிக்கை விடுத்து சிவசேனா நாளேடான ''சாம்னா''வில் கூறப்பட்டுள்ள தாவது:

''நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் ''அச்சே தின்''  வரவே இல்லை என்று தான் தோன்றுகின்றது. மத்தியிலும் மாநிலத்திலும், பாஜகவால் ஆளப்படுவதால், மகாராட்டிரா மந்திரத்தால் வளர்ச்சியடைந்த மாநிலம் போல்  நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியைக் கூட கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆட்சி என்று கூறிக் கொண்டுதான் இருந்தோம். அதை மக்களும் வரவேற்றார்கள். அதே போல் மோடியின் ஆட்சியையும் வர வேற்றார்கள். ஆனால் தினமும் பசியாலும், பட்டினியாலும் மக்கள் தினமும் மடிந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. முடி வில் வேறு வழியின்றி குடும் பங்களாக தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.

விதர்பா பகுதியில் தொடர்ந்து விவசாயிகள் தற் கொலைக்கு எதிராகப் போராடி வருகின்ற நிலையில், மும்பை மற்றும் இதர மகாராட்டிரா மாநிலப் பகுதிகளில் வறுமை மற்றும் பசிக் கொடுமையால் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இதுவரை ஏழைகளும் விவசாயிகளும் தான் தற்கொலை செய்தனர். இந்த நிலைமாறி இந்த ஆட்சியில் தொழில் பாதிப்பு, பொருளாதார இழப்புகள் கார ணமாக மும்பையின் இதயமாக விளங்கும் பாந்திரா மற்றும்  கப்பரேட் பகுதியில் தொழி லதிபர்கள் குடும்பத்துடன் தற் கொலைசெய்து கொண்டதைத் தொடர்ந்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றார்கள்'' என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் செய்தி வெளி யிடப்பட்டுள்ளது.

மேலும் ''ஆளும் பாஜகவி னருக்கு தினமும் பாலிவுட் நட்சத்திரங்களைப் பார்ப்பதற் கும், தொழிலதிபர்களைக் காண வுமே நேரம் சரியாக இருக் கின்றது. இந்நிலையில் தினமும் ஏழை மக்கள் சந்திக்கும் பிரச் சினைகளைக் காண அவர் களுக்கு நேரம் எங்கிருந்து கிடைக்கும்? மெட்ரோ, ஹைப்பர் சிட்டி, புல்லட் ரயில்கள் போன்ற மிகப் பெரிய திட்டங்களினால் ஏழைகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.   கோடிக்கணக்கில் முதலீடு செய்து நீண்ட காலமாக வணி கம் செய்துவந்த தொழிலதிபர்கள் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப் பிழப்பு போன்ற நடவடிக்கை களால் தொழிலில் பெரும் இழப்பைச் சந்தித்து இழப்பை ஈடுகட்ட இயலாத நிலையில் தற்கொலை செய்துகொண்டனர். இந்த நிகழ்வு மும்பை மட்டு மல்லாமால் நாடு முழுவது முள்ள தொழிலதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது'' என்றும் 'சாம்னா' நாளேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner