எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காங்கிரசு கேள்வி

மும்பை, ஜூலை 7 பணமதிப்பு நீக்கம் என்பது துக்ளக் முடிவுஎன்று உண்மையைப் பேசக்கூடியவர்கள் பிரதமர் மோடியைச் சுற்றி யாராவது இருக்கிறார்களா? என்று காங்கிரசு மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக மும்பையில் நடை பெற்றவிழா ஒன்றில் அவர் மேலும் பேசியிருப்பதாவது:

ஒருவர் பிரதமராக இருந் தால் கூட,அவரைச் சுற்றி நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சரி எனத்தலையாட்டும் நபர் களை வைத்திருக்க முடியாது. உண்மை பேசுபவர்கள்தான் அதிகா ரத்தில் இருப்பவர்களைச் சுற்றி இருக்க வேண்டும்.

இந்திரா காந்தியின் பதவிக்காலத்தில் ஹக்சர் மிகவும் துணிச்சலான மனிதராக, அதிகாரியாக, உண்மைகளை நேருக்குநேர் கூறும்மனிதராக இருந்தார். இதுபோன்று உண் மைகளை துணிச்சலாகக் கூறக்கூடிய மனிதர்கள் தான் அதிகாரத்தில் இருப்பவர்க ளுக்கு அவசியம். அதிலும் பிரதமர் மோடியிடம், பண மதிப்பு நீக்கம், ஒரு துக்ளக் முடிவு என்று உண்மையை நேருக்கு நேர் சொல்லக்கூடிய துணிச்சல் உள்ளவர்கள் அவரைச் சுற்றி இருப்பது அவசியம். அப்படி இருக்கி றார்களா? என்று தெரிய வில்லை.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner