எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 8  நாட்டின் பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 57,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய பிரதமரும், மத்திய அமைச்சர்களும், அதுபற்றி பேசாமல் மவுனம் காத்து வருவ தாகவும் சிதம்பரம் விமர்சித் துள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதை சூழல் குறித்து மகாராஷ்டிர காங்கிரசு சார்பில் நாசிக் நகரில் கருத்தரங்கு ஒன்று சனிக்கிழமை நடைபெற்றது. அதில், பங்கேற்று சிதம்பரம் பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது. முதலீட்டு நடவடிக்கைகள் முடங்கிப் போய்விட்டன. கடந்த 4 ஆண்டு களில் 70 லட்சம் வேலைவாய்ப்பு களை உருவாக்கியதாக பாஜக அரசு தெரிவித்து வருவது சுத்தப் பொய். பல லட்சக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள் ளனர் என்பதே உண்மை.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மக்களை அடித்துக் கொல்லும் கும்பலில் உள்ள வர்கள் கூட வேலை இல்லாத வர்கள்தான். பிரணாப் முகர்ஜி மத்திய நிதியமைச்சராக இருந்த போது சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த வேண் டும் எனத் தெரிவித்தார். அப் போது அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பாஜகதான், தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பை குறித்து பெருமைபட பேசி வருகிறது என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner