எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீங்களே நேரடியாக ஆட்சி செய்யுங்கள்

பாஜகவுக்கு சிவசேனா சூடு

மும்பை, ஜூலை 8- -தங்களைப் பிடிக்காதவர்களை ஆட்சி செய்ய விடமாட்டோம் என்றால், பின் னர் எதற்காக மாநிலங்களில் தேர்தல் நடத்த வேண்டும்? என்று பிரதமர் மோடிக்கு, சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.சாம்னா பத்திரிகை தலையங்கத் தில் சிவசேனா இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:

டில்லியில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதி காரப் போர் ஏற்பட்ட வேளை யில், பிரதமர் மோடி தலை யிட்டு, துணை நிலை ஆளு நரைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அவர் செய்ய வேண்டிய பணியை, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆலோசனை கூறுப வராக துணை நிலை ஆளுநர் இருக்கலாம், ஆனால், தடை செய்பவராக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டித் துள்ளது. எனவே, இனிமேலா வது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரின் பணியைத் தொடர மத்திய அரசு அனு மதிக்க வேண்டும்.

தேசிய அரசியல் களத்தில் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் பைஜாலுக்கும் நடந்த அதிகாரப்போராக இதை சிவசேனா கருதவில்லை. டில்லி முதல்வருக்கும், பிரதம ருக்கும் இடையே நடந்த அதி காரப்போராகவே பார்க்கிறது.

டில்லி அரசுக்கு, அலுவல கத்தில் ஒரு சாதாரண பியூனைக் கூட வேலையில் நியமிக்க அதிகாரம் இல்லை, எந்தவித மான கொள்கை முடிவும் எடுக்க முடியவில்லை, அய்ஏஎஸ் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம், ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை என்றால், இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கழுத்தை நெறிப்பதற்குச் சமம். இதனால்தான், கெஜ்ரிவாலும், அவரின் அமைச்சர்களும் ஆளு நர் மாளிகையில் போராட்டம் நடத்தினார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால் முறை யாகச் செயலாற்றவில்லை, ஊழல்வாதியாக இருக்கிறார் என மத்திய அரசு நினைத்தால், ஆட்சியைக் கலைத்து விடுங் கள். ஆனால், ஓர் அரசாங்கம் செயல்படவிடாமல் தடுப்பது என்பது அநீதியாகும். தங்களை எதிர்ப்பவர்களை மற்றும் தங் களை எதிர்க்கும் மாநில அரசு களை, பாஜக-வும், மோடியும் விரும்பவில்லை என்றால், எதற்காகத் தேர்தல் நடத்த வேண்டும்? இவ்வாறு சிவ சேனா கேட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner