எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், ஜூலை 8- மத்தியப்பிர தேச மாநிலத்தில் ஹோஷங்கா பாத் பகுதியில் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றிவருபவர் அஜய் அகிர்வார் (வயது 23) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விபத் துக்குள்ளானார். அதனால், அவ ரால் அடுத்த நாளான திங்கள் கிழமையன்று பணிக்கு செல்ல முடியவில்லை. மேலும், பணிக்கு வரமுடியவில்லை என்றும் பெட் ரோல் பங்க் உரிமையாளருக் கும் தெரிவிக்கவில்லை.

அதனையடுத்து, பெட் ரோல் பங்க் உரிமையாளர்கள் ஊழியர் ஒருவரை அஜய் அகிர் வாரின் வீட்டுக்கு அனுப்பி அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துவரச்செய்தனர். அதன்பின்னர் அகிர்வாரை பெட்ரோல் பங்க்கில் கட்டி வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தோலினால் ஆன சவுக்கால் ஒருவர் பின் ஒருவராக சரமாரியாக தாக்கி யுள்ளார்கள்.

அந்நிகழ்வை பெட்ரோல் பங்க்  உரிமையாளர்களில் ஒரு வர் தன்னுடைய செல்பேசியில் படமெடுத்தார். அக்காட்சிப் பதிவு தற்பொழுது சமூக ஊட கங்களில் பலராலும் பகிரப் பட்டு பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் அக் காட்சிப்பதிவு பரவியதைய டுத்து, காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து இந்நிகழ்வு தொடர்பாக இருவரைக் கைது செய்தனர்.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இது போன்ற தாக்குதல் நிகழ்வுகள் நடந்துவருவது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள காங்கிரசு கட்சி  ஆளும் பாஜகவுக்கு கண்டனத் தைத் தெரிவித்துள்ளது. பிரிட் டிஷ் கால ஆட்சியில் நடை பெற்ற கொடுங்கோன்மை தற் பொழுதும் நடந்துவருகிறது என்று காங்கிரசு கட்சி கண் டனம் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner