எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெய்ப்பூர் ஜூலை 9 மோடி கலந்து கொண்ட விழாவில் கருப்பு நிற உடையணிந்த பெண்ணிடம், காவல் துறை யினர் துப்பட்டாவை பறி முதல் செய்தனர், மேலும் கூட்டத்தில் கருப்பு நிற ஆடை அணிந்தவர்களை வெளியேற்றிய நிகழ்வு அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மோடி பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக் கல் நாட்டினார். இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது, அங்கிருந்த பொதுக் கூட்ட மேடையில் மோடி பேசுவதற்கு முன்பு காவல் துறையினர்  கருப்பு உடை அணிந்து வந்தவர்களை விழா அரங்கத்தில் இருந்து வெளியேற்றினர்.

மேலும் கருப்பு நிறத் தொப்பி, கருப்பு நிறக்கைக் குட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தியவர்களிடம் இருந்து அவற்றை பறித்தனர்.

விழா நடக்கும் இடத்துக்கு முன்னதாக உள்ளே வந்த ஒரு பெண்ணின் கருப்பு துப்பட்டாவை கண்டு  அவரிடம் இருந்த அந்த துப்பட்டாவை காவல்துறையினர் பிடுங்கினர். மோடியின் விழா முடிந்த பிறகு விழா அரங்கத்திற்கு வெளியே கருப்பு நிறமுள்ள கைக் குட்டைகள், சட்டைகள் உள்ளிட்ட பல கருப்பு நிறப் பொருட்கள் குப்பைபோல் குவிந்து கிடந்தன. இதே போல் கடந்த மார்ச் மாதம், உ.பி. முதல்வர் சாமியார் ஆதித்யநாத் கூட்டத்திற்கு வந்த இஸ்லாமியப் பெண்கள் தங்களது புர்கா எனப்படும் கருப்பு நிற ஆடையை கூட் டத்தினர் முன்னிலையில் கட்டாயப்படுத்திக்  கழற் றினர். அதே போல் தற்போது மோடியின் கூட்டத்திலும் நடைபெற்றுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner