எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 9 மத்திய பாஜ அரசை கண்டித்து தமிழக இளைஞர் காங்கிரசு சார்பில், சென்னை ராஜாஜி சாலை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் காலை கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. சென்னை மாவட்ட தலைவர் அருண் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கேசவ் சந்த் பங்கேற்று பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜ அரசு, 4 ஆண்டுகளில் ஆட்சி செய்து எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை.

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தாமல், வேலை வாய்ப்பு களை உருவாக்காமல், 8 வழி சாலையை செயல்படுத்துவது தேவையா? மத்திய அரசின் 4 ஆண்டு சாதனையில், ஜிஎஸ் டியை கொண்டு வந்து, மக்களின் பொருளாதாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.

அனைத்து நிறுவனங்களும் மூடப்படுகிறது. ஜிஎஸ்டி பண மதிப் பிழப்பால், மக்களை அலைய வைத்தது மட்டுமே மத்திய அரசின் சாதனையாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்த லில், பாஜவுக்கு எதிராக வாக்களித்து, இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றார்.

இதில் 300க்கு மேற்பட்ட காங்கிரசு தொண்டர்கள் கலந்து கொண்டனர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner