எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சுவிட்சர்லாந்து, ஜூலை 16- சுவிட்சர் லாந்து நாட்டு வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் ரூ.300 கோடி பணம் பல ஆண் டுகளாக உரிமை கோரப்படா மல் இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து நாட்டவர்களின் தகவல்களும் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந் நாட்டு அரசால் வெளியிடப் பட்டது. இதை பயன்படுத்தி, சுவிட்சர்லாந்து வங்கியில் இருக்கும் பணத்தை உண்மை யான உரிமையாளர்கள், அவ ரது பிரதிநிதிகள் ஆகியோர் உரிய ஆவணத்தை காண்பித்து உரிமை கோர வழிவகை செய் யப்பட்டது. இதன்படி, உரிய ஆவணத்துடன் பணத்தை உரிமை கோரினால், அவர்களது பெயர், ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியலிலிருந்து நீக்கப்படும். இதன்படி 40 கணக்குகளுடன் தொடர்பு டைய விவரம் நீக்கப்பட்டது.

அதேநேரத்தில், தொடர்ந்து 3,500 கணக்குகள் குறித்த விவ ரம் இன்னமும் தெரியவில்லை. இதில் இந்தியர்களுடன் தொடர்புடைய 6 கணக்குகளும் அடங்கும். அந்த கணக்குகளில் இருக்கும் பணத்தை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

இந்த 6 கணக்குகளில், 3 கணக்குகள் மும்பையைச் சேர்ந்த பெர்ரி வாசெக், பெர் னர்ட் ரோஸ் மேரி, டேராடூ னைச் சேர்ந்த பகதூர் சந்திர சிங் ஆகியோருக்கு சொந்தமா னது ஆகும். எஞ்சிய 3 கணக் குகள், இந்திய வம்சாவளியின ருக்கு சொந்தமானது ஆகும். அவர்களில் ஒருவர், பிரான்சு தலைநகர் பாரிசை சேர்ந்த டாக்டர் மோகன் லால் என்று தனது பெயரை குறிப்பிட்டுள் ளார். 2ஆவது நபர், பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த சுசா யோகேஷ் பிரபுதாஸ் எனத் தெரிவித்துள்ளார். 3 ஆவது நபர், தனது பெயரை கிஷோர் லால் எனக் குறிப் பிட்டுள்ளார். ஆனால் அவர் தனது முகவரியை வெளியிட வில்லை.

இந்தியர்களுக்கு சொந்த மானதாக கூறப்படும் இந்த 6 கணக்குகளிலும் மொத்தம் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும், ரூ.300 கோடி பணம் இருப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

இந்த 6 கணக்குகளும், கடந்த 2015ஆம் ஆண்டு டிசம் பர் மாதம் வெளியிடப்பட்டது. அதை யாரும் உரிமை கோரா தபட்சத்தில், தொடர்ந்து பட் டியலில் 2020ஆம் ஆண்டு டிசம் பர் மாதம் வரை இருக்கும். உரிய ஆவணத்துடன் யாரும் அதை உரிமை கோரும்பட்சத் தில், பட்டியலில் இருந்து அந்த கணக்கு விவரம் நீக்கப்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner