லக்னோ ஜூலை 17 உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு, கோயிலுக்குள் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பல் மாவட்டம், ராஜ்புரா பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் தனது மகளுடன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இருந்தார். அப்போது வீட்டை உடைத்து கொண்டு உள்ளே புகுந்த 5 பேர் கும்பல், அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கியது.
இதைத் தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்து பெண்ணை அருகில் உள்ள கோயிலுக்குள் அக்கும்பல் இழுத்துச் சென்றது. இதன்பின்னர், கோயில் வளாகத்துக்குள் பெண்ணை உயிருடன் எரித்து அந்தக் கும்பல் கொலை செய்தது. இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், 5 பேருக்கு எதிராக காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.