எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 20 ஆதார் அடை யாள அட்டை தொலைந்துபோனால், 1947 என்ற தொலைபேசி எண் வாயிலாக மறுபடியும் பெற்று கொள்ள முடியும்.

மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் புகைப்படம், விழி, விரல் ரேகை உள்ளிட்ட விபரங்களுடன் கூடிய, ஆதார் அடையாள அட்டையை வழங்கி வருகிறது. புதிதாக வங்கி கணக்கு துவக் குவது, குடும்ப அட்டை பெறுவது என அரசின் அனைத்து சேவைகளையும் பெறு வதற்கு ஆதார் அடையாள அட்டை அவசி யப்படுகிறது. ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் தங்களின் ஆதார் எண்ணும் தெரி யாததால், மாற்று அடையாள அட்டையை வாங்கமுடியாமல் அவதிக்குள் ளாகின்றனர். இடைத்தரகர்களை நாடி, நேரத்தையும், பணத்தையும்  செலவு செய்யவேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர். காணாமல் போன, ஆதார் அடையாள அட்டையை மீண்டும் பெறவேண்டுவோர் 1947 என்ற நுகர்வோர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து விவரங் களைக் குறிப்பிட்டு மறுபடியும் பெற்று கொள்ளலாம். ஆதார் எண் தெரியா விட்டாலும் பரவாயில்லை.  விவரங்களைத்  தமிழிலேயே தெரிவிக்கலாம். அதன்பின்னர், மாற்று ஆதார்  அடையாள அட்டை முகவரிக்கே வந்துசேரும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner