எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாக் ப்ரி பவுண்டேசன் ஆய்வறிக்கையில் தகவல்

புதுதில்லி, ஜூலை 22 -இந்தியாவில் 80 லட்சம் நவீன அடிமைகள் உள்ளதாக, உலக அடிமை முறை குறித்த ஆய் வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக் ப்ரி பவுண்டேசன் என்ற அமைப்பு உலக அடிமை முறை குறித்த தனது 2018-ஆண் டிற்கான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.48 நாடு களில் 54 சர்வேக்களின் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 71 ஆயிரத்து 158 தனிநபர்களிடம் நேர்காணல் செய்யப்பட்டுள் ளது. இதில், இந்தியாவில் 80 லட்சம் பேர் நவீன அடிமை களாக உள்ளதாகவும், அதாவது ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 6 பேர் நவீன அடிமைகளாக உள்ளனர் என்பதும் தெரிய வந் துள்ளது. கட்டாயப்படுத்தப் பட்ட உடலுழைப்பு, கடனை அளித்து அடிமையாக்குவது, கட்டாயப்படுத்தப்பட்ட திரு மணம், ஆளைக் கடத்தி அடிமையாக வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாவது நவீன அடிமை முறை என வாக் ப்ரி பவுண் டேசன் வரையறை செய்துள் ளது.இந்த பட்டியலில் சீனா 111-ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா மோச மான வகையில் 53-ஆவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், உலக அடி மைகள் குறித்த ஆய்வறிக் கையை மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மறுத்துள்ளது. ஆய்வில் வைக்கப்பட்டுள்ள அளவீட்டு முறைகள் மற்றும் ஆய்வு முறை தவறானது என்று விமர்சித்துள்ளது. கட்டாயப் படுத்தப்பட்ட உடலுழைப்பு என்ற வரையறை இந்தியாவின் பொருளாதார பண்பாட்டுச் சூழலுக்கு பொருந்தாது என்று அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், நவீன அடிமை முறை குறித்து சட்டத்தில் இல்லாமல் இருக் கலாம்; ஆனால் பொருளாதார பண்பாட்டுச்சூழல் என்ற போர்வையில், இந்தியாவில் இன்னும் நவீன அடிமை முறை கடைப்பிடிக்கப்பட்டே வருகிறது என்று வாக் ப்ரி பவுண் டேசன் ஆய்வு கூறியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner