எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூலை 24 கவுரி லங்கேஷ் கொலை வழக்கில், மேலும் 2 பேரை சிறப்புப் புல னாய்வுப் படையினர் (எஸ்அய்டி) கைது செய்தனர்.

பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-இல் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். நாட் டையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கை சிறப்புப் புலனாய்வுப் படை(எஸ்அய்டி) விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக பரசுராம் வாக்மோரே உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சந்தேகப்படும் மேலும் இருவரை சிறப்புப் புலனாய்வுப் படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்கள் ஹுப்பள்ளியைச் சேர்ந்த அமித் ராகவேந்திரபட்டி, கணேஷ்மிஸ்கி ஆகியோர் என உறுதிசெய்யப் பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய் வுப் படையின் விசாரணை அதிகாரி எம்.என். அனுசேத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது:-

இருவரையும் மாநகர நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினோம். கூடுதல் விசாரணைக்காக இரு வரையும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை சிறப்புப் புலனாய்வுப் படையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரின் பங்களிப்பை தற் போது வெளியிட இயலாது என் றார் அவர். எனினும், கவுரி லங்கேஷை கொலை செய்வதற்கு முன்பாக அவர் வசித்துவந்த இடத்தை இருவரும் நோட்டம் விட்டதாக காவல்துறை வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில், அமித் ராகவேந்திர பட்டி பொற்கொல்லர் வேலை செய்து வந்ததாகவும் கணேஷ் மிஸ்கி, ஊதுவத்தி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் சிறப்புப் புலனாய்வுப் படையின் விசாரணையில் தெரிய வந்துள் ளது. கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் அமித் ராகவேந்திர பட்டி, கணேஷ் மிஸ்கி தவிர கே.டி.நவீன்குமார், அமோல் காளே, அமித் தேக்வேகர், பரசுராம் வாக்மோரே, சுஜித் குமார், மனோகர் எடவே, மோகன் நாயக் ஆகிய 9 பேரை கைதுசெய்துள்ளனர். கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டதாக பரசுராம்வாக்மோரே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 9 பேருக்கும் பகுத்தறிவாளரும், எழுத்தாளருமான எம்.எம்.கலபுர்கி கொலைக்கும் சம்பந்த மிருப்பதாக காவல்துறை சந்தே கப்படும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் சிபிஅய் தலைவர் கோவிந்த் பன்சாரே, பகுத்தறி வாளர் நரேந்திர தபோல்கர் ஆகியோரின் படுகொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்பதை சிறப்புப் புலனாய்வுப் படை ஆராய்ந்து வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner