எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தன்பாத், ஜூலை 24 ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாநக ராட்சி அலுவலகத்தில், ஆவியை விரட் டும் பூஜை நடத்தப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ரகு பர்தாஸ் தலை மையில், பா.ஜ., - ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு கூட் டணி ஆட்சி நடக்கிறது.இங் குள்ள தன்பாத் மாநகராட்சி அலுவலகத்தில், இறந்த பெண் ஒருவரது ஆவி உலவுவதாக, அலுவலர்களிடம் பீதி ஏற்பட் டது. மூத்த அலுவலர்கள் சிலர், மேயர் சந்திரசேகர அகர்வால் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோரிடம் முறையிட்டனர். ஆவியை விரட்ட பூஜை நடத்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், மேயர் மற்றும் ஆணையர் இருவரும், அதற்கு மறுத்து விட்டனர். இந் நிலை யில், இரவு நேரத்தில் மாந கராட்சி அலுவலகத்துக்குள் இருந்து, பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்பதாக, இரவுக் காவ லர்களும் தெரிவித்தனர்.

இதையடுத்து, நகராட்சி அலுவலர்கள்,துணைமேயர், எக்வல்யா சிங்கிடம் முறையிட் டனர். அவர், ஆவியை விரட்டும் பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்தார்.

தன்பாத் புறநகரிலிருந்து, வேத விற்பன்னர்கள் வர வழைக்கப்பட்டனர். மாநக ராட்சி அலுவலக மய்யப் பகுதியில், பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜை குறித்து, மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கேட்ட போது, 'கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை' என் றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner