எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால்,ஜூலை26-பாலியல்வல்லுறவுக்கு உள்ளான 16 வயது சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி, 75 கி.மீ. தூரம் பயணம் செய்து, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி, மத் தியப் பிரதேச மாநிலத் தலை நகரான போபாலில் வசித்து வருபவர். இவர், இரவு நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது சந் தன் சிங்அலியாஸ் சுகே, சோனாபால் சிங், தர்மேந் திரா சிங் மற்றும் ஜான்வீர் சிங் ஆகியோர், சிறுமியைக் கடத்தி அருகிலிருந்த வயல் வெளிக்கு தூக்கிச்சென்றுள்ளனர். அங்கு கட்டாயப்படுத்தி சிறுமியை கும்பலாக பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டும் சென்றுள்ளனர். ஒருவழியாக தட்டுத்தடுமாறி அந்தச் சிறுமி வீடுவந்து சேர்ந் துள்ளார்.

நடந்த உண்மைகளை பெற்றோரிடமும் கூறியுள் ளார். இவ்விஷயத்தில் பாதிக்கப்பட்ட நபர் தான் புகார் அளிக்க வேண்டும்; அதைக் காவல்நிலையத்திலுள்ளபெண் காவலர்தான் பதிவு செய்யவேண் டும் என்பது விதி. ஆனால், சிறுமி வசித்து வரும் நாகரா பகுதி காவல்நிலையத்தில் எந்த பெண் காவலரும் இல்லை. மேலும் அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர்களும் இல்லை. இதனால், சிறுமி சுமார் 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மோரினா நகர மாவட்ட மருத் துவமனைக்கு சென்று புகார் அளித்துள்ளார். தற்போது 4 குற்றவாளிகளையும் போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner