எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஜூலை 26 மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள் ளிட்ட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடை பெற்றது. இரண்டாவது நாளாக முழு அடைப்பு போராட்டம் நீடித்தது.

ஆனால், காவல்துறையினர் பாதுகாப்பையும் மீறி, போராட்டக் காரர்கள் வன் முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேக மாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப் படுத்தப்பட்டதால் சில வழித் தடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. போராட்டம் காரணமாக பல் வேறு இடங்களில் போக்கு வரத்து முடங்கியது. கற்களை வீசி தாக்கியவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

இவ்வாறு வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, முழு அடைப்பு போராட் டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் நேற்று பிற்பகல் அறிவித்தனர். மேலும் தங்கள் போராட்டம் வெற்றியடைந் திருப்பதாகவும் தெரிவித்தனர். நாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்கவே விரும்பினோம். ஆனால் ஒரு போதும் போராட்டங்கள் வன் முறையாக மாறுவதை விரும்ப மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர். தங்கள் அமைப்பைச் சேர்ந் தவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும், இதற்கு அரசியல் சதிதான் காரணம் என்றும் மராத்தா கிரந்தி மோர்ச்சா ஒருங்கி ணைப்புக் குழு உறுப்பினர் வீரேந்தர் பவார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், எந்த வன்முறையும் இன்றி 58 அமைதி பேரணிகளை நடத்தி யிருப்பதாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராத தால் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner