எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 31- பாலிவுட் சினிமா சம்பவத்தை போல் உள்ளதாக கூறி, சொத்து தகராறில், தாய்க்கு எதிராக, மகன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டில்லியை சேர்ந்த விதவை தாய்க்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். டில்லியில், தாயின் பெயரில் உள்ள சொத்தை பிரித்து தரக்கோரி, மகள் வழக்கு தொடர்ந்தார்; மகளுக்கு ஆதரவாக தாய் இருந்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், மகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாயை, பல வழிகளில் மகன் கொடுமைப்படுத்தியது குறித்து, அவர் தரப்பு வழக்குரைஞர் விரிவாக எடுத்துரைத்தார். சர்ச்சைக்குரிய சொத்து யாருக்கு சொந்தம் என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை என்றால், தாயை, மகன் தொடர்ந்து துன்புறுத்துவார் என, அவர் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு, 102 நாட் அவுட் என்ற பாலிவுட் திரைப்படத்தில், பெற்றோரை, குழந்தைகள் துன்புறுத்துவதாக வரும் காட்சி களை நினைவுபடுத்துவதாக உள்ளது.தந்தை, தன் மனைவிக்காக விட்டுச் சென்ற சொத்தை, மகன் உரிமை கொண்டாடுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் மேல் முறையீடு செய்த மகனுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - சி.ஆர்.பி.எப் வீரர் மரணம்

சிறீநகர், ஜூலை 31- காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தின் நைரா கிராமத்தை சேர்ந்தவர் நசீர் அகமது. சி.ஆர்.பி.எப். வீரரான இவர் நேற்று தனது வீட்டின் அருகில் சென்றபோது, பயங்கரவாதிகள் சிலர் இவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காஷ்மீரில் தாயாரின் கோரிக்கையை ஏற்று சிறப்பு காவல் துறை அதிகாரியை விடுவித்த 24 மணிநேரத்தில், பயங்கரவாதி கள் சி.ஆர்.பி.எப். வீரரை சுட்டுக் கொன்றது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் வழக்குகளை விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்கள் வேண்டும்: சட்ட அமைச்சகம்

புதுடில்லி, ஜூலை 31- பாலியல் வன்முறை வழக்குகளை விரைவாக முடித்து, நீதியை வழங்கும் புதிய நடவடிக்கை யின் கீழ், நாடு முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு, 767 கோடி ரூபாய் செலவாகும். இதில், மத்திய தொகுப்பில் இருந்து, 464 கோடி ரூபாய் வழங்கப்படும் என, கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner