எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறீநகர், ஆக. 9- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி அளிக்க வகை செய்யும் அரசி யலமைப்பு சட்டத்தின் 35ஏ பிரிவு நீக்கப்படுவதை ஜம்மு பகுதியைச் சேர்ந்த பெரும் பாலான மக்கள் எதிர்ப்பதாக மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜம்முவில் அக்கட்சியின் செய்தித் தொடர் பாளர் அபிஜித் ஜஸ்ரோடியா செய்தியாளர்களிடம் கூறியதா வது:

காஷ்மீர், லடாக் பகுதிக ளைச் சேர்ந்த மக்களைப் போன்று, ஜம்முவில் உள்ள டோக்ரா மக்களும் 35ஏ சட்டப்பிரிவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதாவது, ஜம்முவில் உள்ள பெரும்பாலான மக்களும், அந்த சட்டப்பிரிவு நீக்கப்படு வதை எதிர்க்கின்றனர்.

அந்த சட்டம் நீக்கப்பட் டால், எதிர்காலத்தில் எத்த கைய பிரச்சினைகளை தாங்கள் எதிர்கொள்ள நேரிடும் என் பதை ஜம்முவில் வாழும் டோக்ரா சமூக மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். நானும் டோக்ரா சமூகத்தைச் சேர்ந்தவன்தான். அந்த முறை யில், இந்தக் கருத்தை தெரிவிக் கின்றேன். எனவே, சிறிய குழு வின் கோரிக்கையை ஏற்று, 35ஏ சட்டப் பிரிவு நீக்கப்படு வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அந்த சட்டபிரிவானது, காஷ்மீரின் முன்னாள் ராஜா அரிசிங்கின் பரிந்துரையால் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டப்பிரிவானது, காஷ்மீரையும், நாட்டின் பிற பகுதியையும் இணைக்கும் பாலமாக திகழ்கிறது. எங்கள் கட்சி, மாநிலத்தில் ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி யாக இருந்தாலும், அரசியல மைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு, 35ஏ பிரிவு ஆகியவற்றை பாதுகாக்கும் பணியிலேயே ஈடுபட்டு வந்துள்ளது.

எங்கள் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி தனி ஆளாக இருந்து, கடந்த சில ஆண்டுகளாக அந்த சட்டப்பிரிவுகளை பாதுகாத்தார். தற் போதுதான் மற்ற கட்சியினர் அதுகுறித்து பேசுகின்றனர். அந்த சட்டப்பிரிவுகளை பாது காப்பதற்கு பிடிபி கட்சி, தேவை யான அனைத்து நடவடிக்கை களையும் எடுக்கும் என்றார் அவர்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சித் தலைவர் ஹர்ஷ் தேவ் சிங், 35ஏ சட்டப்பிரிவு விவ காரம் தொடர்பாக சர்ச்சைக் குரிய வகையில் பேசுவதை தேசிய மற்றும் மாநில அரசி யல் கட்சிகள் கைவிட வேண் டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner