எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 10- பொதுமக்க ளின் மரபணு விவரங்களை அரசு சார்பில் சேகரித்து வைக்க வும், அதே சமயம், அத்தகவல் களை தவறாகப் பயன்படுத்து வோருக்கு சிறை தண்டனை அளிக்கவும் வகை செய்யும் மரபணு தகவல் வங்கி மசோதா மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணைகளில் தேடப்படும் குற்றவாளிகளை கண்டறிவது, காணாமல் போன வர்கள் மற்றும் அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்த விவரங்களை கண்டறிவது, பேரிடர்களில் பாதிக்கப்படு வோரை அடையாளம் காணு வது போன்ற நடவடிக்கைகளுக் காக இந்த மசோதா முன்னெ டுக்கப்படுகிறது.

அதே சமயம், மரபணு தக வல்களை பயன்படுத்த அனு மதி இல்லாத அமைப்புகள் அல்லது நபர்களுக்கு தெரிவிக் கும் ஊழியர்களுக்கு அதிகபட்ச மாக 3 ஆண்டுகள் சிறை தண் டனையும், ரூ.1 லட்சம் அபரா தமும் விதிக்கும் அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

சட்டவிரோதமான வகை யில் பிறருடைய மரபணு தக வல்களை கோருபவர்களுக்கும் இதே அளவிலான சிறை தண் டனையும், அபராதமும் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.

நாட்டின் எந்தவொரு பகு தியிலும் அடையாளம் தெரி யாத சடலங்கள் மீட்கப்படும் போது, ஏற்கெனவே சேகரிக் கப்பட்டுள்ள மரபணு விவரங் கள் மூலமாக அடையாளம் காண முடியும் என தெரி விக்கப்படுகிறது.

இந்த மசோதாவுக்கு காங் கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுதரி எதிர்ப்பு தெரிவித்தார். மரபணு விவரங்களை சட்ட அமைப்புகளும், விசாரணை அமைப்புகளும் தவறாக பயன் படுத்தும் வாய்ப்புகள் இருப் பதாக அவர் கூறினார்.

மக்களின் விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இன்றியோ அவர்களது மரபணுவை சேகரிக்க மசோதா வழிவகை செய்கிறது. இது அரசமைப்புச் சட்ட விதிகளை மீறுவதாகும். ஆகவே, இந்த மசோதாவை நிபுணர்களின் ஆய்வுக்கு உள் படுத்தவேண்டும்'' என்றார் அவர்.

இதையடுத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதில் அளித்துப் பேசுகையில், இந்த மசோதா வாஜ்பாய் அரசின் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு போதுமான ஆய் வுகள் செய்யப்பட்டுவிட்டன.

உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு இந்த மசோதாவுக்கு ஒப்பு தல் அளித்துள்ளது. அதேசம யம், தனிநபர் சுதந்திரம் பாதிக் கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்'' என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner