எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 10- ஆண்டு தோறும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 65 சத வீதம் பேர், 18 முதல் 35 வயதுக் குள்ளான இளைஞர்கள் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியா ழக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

மக்களவையில் வியாழக் கிழமை கட்கரி பேசியதாவது:

ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர் களில் 65 சதவீதம் பேர், 18 முதல் 35 வயதுக்குள்ளான இளைஞர்கள் ஆவர். இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், அடிக்கடி விபத் துகள் நிகழும் 786 ஆபத்தான இடங்கள்' கண்டறியப்பட்டுள் ளன. இந்த இடங்களில் உள்ள சாலைக் கட்டுமானக் குறை பாடுகளைக் கண்டறிந்து, போக் குவரத்து அமைச்சகம் அத னைச் சரிசெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மட் டும் ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படு கின்றன. இந்த விபத்துகளைக் குறைக்க, மக்கள் மது அருந்தி விட்டு வாகனங்கள் இயக்குவ தையும், கைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக் குவதையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மாநி லங்களவையில் நிறைவேற்றப் பட, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஒத்துழைக்க வேண்டும். இந்த மசோதா நிறைவேறினால், சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச் னைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும்.

வாகனங்களைப் பதிவு செய் யும் நடைமுறையைத் தனியா ருக்கு அளிப்பதன் மூலம், மசோதாவானது மாநில உரி மைகளைப் பறிக்க முயல்வ தாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிலரும், எதிர்க் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது முற்றிலும் தவறான புரிதல் ஆகும். புதிய மோட் டார் வாகன சட்டத்திருத்தத்தின் கீழ் மாநில அரசுகளின் உரி மைகள், எவ்வித சூழலிலும் பறிக்கப்படாது என்று கட்கரி தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner