எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இடுக்கி, ஆக.10  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையில் இருந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு வியா ழக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள இடுக்கி அணை 2,405 அடி உயரம் கொண்டது. தற்போது கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருகிறது. வியாழக் கிழமை நிலவரப்படி அணை யின் நீர்மட்டம் 2,399 அடியாக உள்ளது. பலத்த மழை பெய்து வருவதால் இடுக்கி, எர்ணா குளம், திருச்சூர் மாவட்டங் களில் பலத்த சேதம் ஏற் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இடுக்கி அணையைத் திறக்க உத்தரவிட்டார். அதன்பேரில் இடுக்கி அணையை நிர்வகித்து வரும் கேரள மாநில மின்சார வாரியம் வியாழக்கிழமை மதி யம் 12.30 மணிக்கு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டது.

இடுக்கி அணைக்கு மதகுகள் கிடையாது. இடுக்கி அணைக்கு பின்புறமாக 10 கிலோ மீட்டர் தொலைவில் செறுதோணி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் 5 மதகுகள் உள்ளன. இதில் நடுவில் உள்ள மதகு வழியாக விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் சோதனை ஓட்டமாக திறந்து விடப்பட்டது. கடந்த 1992 ஆம் ஆண்டுக்கு பின், 26 ஆண்டுகள் கழித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படு வதை பொதுமக்கள் ஆர்வத் துடன் பார்த்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner