எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஆக.11 உத்தரப்பிரதேச அரசு தனது முன்னேற்ற திட்டங்களைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க லோக் கல்யாண் மித்ரா''என்ற பெயரில் ஒரு அமைப்பைத் துவங்கி அதில் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்  அமைப்பினரை நியமித்து வருகின்றது.     இந்த இந்துத்துவ அமைப் பினருக்கு மாத ஊதியமாக ரூ.25,000 நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு ஒப்பந்தம் முடிந் ததும் அவர்களுடைய வேலைத் திறமை யைப் பொறுத்து தொடர்ந்து ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமாம். இந்த வேலைத் திறனை கணக்கிடுவதை மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத் நேரடியாக செய்து வருகிறார்.இந்நிலையில்ஏற்கெனவேபணி யில் அமர்த்தப்பட்ட சாமியார்ஆதித்திய நாத்தின் யுவ வாகினி என்ற அமைப்பினரு டன் மேலும் 822 ஆர்.எஸ்.எஸ்.காரர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்.

லக்னோவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊழியர்கள் வரும் 2019 தேர்தல் வரை பணி புரிவார்கள்.  மேலும் இந்த அமைப்பில் சேர உள்ளூர் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களிடம் கடிதம் வாங்கி வரவேண்டும் என்றும், அப்படிகொண்டுவராதவர்களுக்குவேலைகள் வழங்குவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.

உ.பி. மாநில காங்கிரசு செய்தி தொடர்பாளர் அன்சு அவாஸ்தி,  அரசின் நிதியை எடுத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினருக்கு அளிக்க முதல்வர் புதிய ஊழியர்களை நியமித்துள்ளார். அரசு எந்த ஒரு சாதனையையும் செய்யாதபோது, எதற்கு இந்த ஊழியர் நியமனம் என்பது புரியவில்லை. தற்போதைய நிலையில் உ. பி. மாநிலத்தில் கல்வி நிலைமையானது மிகவும் பின்தங்கி உள்ளது.   மாநில அரசு ஆண்டுக்கு 14 லட்சம் வேலை வாய்ப்பு என 5 ஆண்டுகளில் 70 லட்சம் வேலை வாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை ஓராயிரம் பேருக்குக் கூட வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ. 10,000 ஆக உள்ளது. அதை உயர்த்த அவர்கள் தொடர்ந்து கோரிக்கை அளித்து வருகின்றனர்.   அதே நேரத்தில் அரசின் விளம்பர ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.25000 ஆக உள்ளது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner