எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொச்சி, ஆக. 13- கேரள மாநி லத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளச் சேதங்களை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அல்போன்ஸ் கன்னந்தா னம் ஆகியோர் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனு டன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர். கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச் சர் ராஜ்நாத்சிங் ஞாயிறன்று மதியம் கேரளா வந்தார்.

விமான நிலையத்திலிருந்து மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னந்தானம், கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள் இ.சந்திரசேகரன் கூடுதல் முதன்மை செயலாளர் பி.எச்.குரியன் ஆகியோர் விமா னப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட நெடும்பச்சேரியிலிருந்து (கொச்சி) புறப்பட்டு சென்றனர்.கேரள மாநிலத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப் போது மிக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக கேரள மாநிலத்தில் அனைத்து அணைகளும் திறக்கப்பட்டுள் ளன. எங்கு பார்த்தாலும் வெள் ளக்காடாகக் காட்சி அளிக்கி றது. வயநாடு, இடுக்கி, எர்ணா குளம், ஆலப்புழா, கோட்ட யம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 8 மாவட்டங் களில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இரவு நேரங்களில் யாரும் வெளியே செல்லவேண் டாம் என அறிவிக்கப்பட்டுள் ளது. இடுக்கி அணைக்குத் தண்ணீர் வரத்து குறைந்துள் ளது. இடைமலையாறு அணை யின் மூன்று ஷட்டர்களும், பம்பா அணையில் 2 ஷட் டர்களும் மூடப்பட்டுள்ளதால் ஆறுகளில் நீரின் அளவு சற்று குறைந்துள்ளது. மழை தொட ரும் என்பதால் வயநாட்டில் அதிகப்படியான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு முகாம் களில் தங்க வைக்கப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் மழையால் வீடு இடிந்தவர்கள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் என மொத்தம் 60,622 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட் டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் பெரு மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி யும், வீடுகள் இடிந்தும் இது வரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கேரள முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் சனியன்று பல்வேறு பகுதிகளை பார்வையிட்டதோடு நிவாரண முகாம் களுக்கும் சென்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் மின்சாரமும், தகவல் தொடர் பும் தடைபட்டுள்ளன. தகவல் தொடர்பு இல்லாத பகுதிகளி லும் ராணுவம் மீட்பு பணிக ளில் ஈடுபட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner