எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஆக. 13- கலைஞரின் உருவப்பட திறப்பு மற்றும் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி புதுவை சற்குரு ஓட்ட லில் நேற்று நடந்தது. நிகழ்ச் சிக்கு வடக்கு மாநில அமைப் பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைஞரின் உருவப்படத்தை முதல்அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்து மலர்தூவி மரி யாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

உலக தமிழர்களின் பாதுகா வலராக திகழ்ந்தவர் கலைஞர். அவரது வாழ்வு பல போராட் டங்கள் அடங்கியது. சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் எல் லோரது மனதிலும் இடம் பிடித்தார்.

அவர் கொண்டு வந்த திட்டங்கள் பலவற்றை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அவர் எங்கள் கூட்டணியில் இருந்தபோதும், எதிர் அணி யில் இருந்தபோதும் அவரை மிகவும் ரசித்தவன் நான். தோல்வி கண்டு துவளாதவர்.

சிலர் ஓரிரு தேர்தல்களுக்கு இருந்துவிட்டு 3ஆவது தேர்த லில் காணாமல் போய்விடுவார் கள். தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவராக பல பிரதமர்களை உருவாக்கிய பெருமை கலைஞரை சேரும். ஆடம்பர வாழ்க்கை என்பது அவருக்கு பிடிக்காது.

சோனியாகாந்தியை அனை வரும் வெளிநாட்டவர் என்று கூறியபோது, அவர் இந்திய பெண்மணி என்று பிரகடனப் படுத்தியவர் கலைஞர். அவரது மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்புவார். மதச்சார்பற்ற அணி கள் ஒன்றுசேரும் காலகட்டத் தில் நாம் உள்ளோம். கலைஞர் போலவே நாம் அனைவரும் மக்களுக்காக பாடுபடுவோம் என்றார் புதுவை முதல்வர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner