எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்தராபாத், ஆக. 13- அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங் கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் 12.8.2018 அன்று அய்தராபாத் சுந்தரய்யா விஞ்ஞான கேந்திர அரங்கில் நடைபெற்றது. கூட்டமைப்பின் செயல்தலைவர் ஜே.பார்த்தசாரதி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி ஆண்டு அறிக்கையை அளித்தார். 2017--18 ஆண்டுக்கான வரவு செலவு கணக்கினை பொருளாளர் எம்.இளங்கோவன் சமர்ப் பித்தார். தலைவராக மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர் வி.அனுமந்தராவ், செயல் தலைவராக ஜே.பார்த்தசாரதி, பொதுச் செயலாளராக கோ.கருணாநிதி, பொருளாளராக எம்.இளங்கோவன் மற் றும் ஏனைய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னதாக, மறைந்த தலைவர் டாக் டர் கலைஞர் அவர்களின் நினைவை போற்றும் வகையில், அவரது படத் திற்கு மாலை அணிவித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திற்கு கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, கிரிமி லேயர் முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் நல னுக்காக தனி துறை அமைக்கப்பட வேண்டும், நீதித்துறையிலும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பொதுக்குழுவிற்கு தெலுங்கானா, தமிழ் நாடு, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து  மத்திய அரசு, பொதுத்துறை பிற்படுத்தப்பட்ட நல சங் கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner