எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜகவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கண்டனம்

ஜெய்ப்பூர், ஆக.15 ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. முதல்வர் வசுந்தரா ராஜே, அவர் கட்சியின் நலனுக்காகமாநிலத்தில்பய ணம் செய்கிறார். அந்தப் பய ணத்தில் அரசுத் துறைகளின் வாயிலாக மக்களின் வரிப் பணத்தை செலவழிக்கிறார் என்பது குறித்த பொது நல வழக்கில் ராஜஸ்தான் மாநில பாஜக அரசுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் பயணச் செலவுகுறித்து அறிக்கையை 16.8.2018 தேதிக்குள் அளிக்கும்படி ராஜஸ்தான் மாநில பாஜக தலை வர் மதன்லால் சைனிக்கு அம் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுநல வழக்கு தொடர்ந் துள்ள வழக்குரைஞர் விபூதி பூஷன் சர்மா மனுவில் கூறியி ருப்பதாவது:

ஆளும் கட்சியின் தேர்தல் லாபத்துக்காக முதல்வர் வசுந்தரா ராஜே கவுரவ் யாத்திரை மேற் கொண்டுள்ளார். அந்த பயணச் செலவுகளை அரசுத்துறைகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதீப் நந்த்ராஜோக் தலைமை யிலான அமர்வில் அவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

வழக்கின் பிரதிவாதிகளாக ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர்மதன்லால்சைனி, ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர், ராஜஸ்தான் மாநில பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் ஆகியோர் உள் ளனர்.

பொதுப்பணித்துறையின் சார்பில் வழக்கில் வாதாடிய வழக்குரைஞர் கூறுகையில், முதல்வரின் கவுரவ யாத் திரை பயண செலவுகள் ஏற் கெனவே திரும்பப் பெறப் பட்டுவிட்டதாக கூறினார். இப்பிரச்சினையில், பாஜக தலைவர் பதில் அளிக்கவேண் டியது முக்கியமானதாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட் டுள்ளது.

பொதுநல வழக்கு மனுவில், முதல்வரின் கவுரவ் யாத் திரை பயண ஒருங்கிணைப் பாளரே ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த்கட்டாரியாதான். அவர் கூறுகையில், பாஜகவின் கவுரவ யாத்திரை பயண செலவினங்களை பாஜகவே ஏற்கும் என்று கூறி னார். அதேநேரத்தில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் யூனுஸ்கான் கவுரவ யாத்திரை பயணத்தை அரசு நிகழ்ச்சி என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்தப் பயணம் பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் தேர்தல்பரப்புரையாகவேஉள் ளது. அரசு செலவிட்ட தொகையை, அரசுக்கே பாஜக திருப்பிக் கொடுக்க வேண்டும். பொதுப்பணத்தை எந்த வகை யிலும் வீணாக்கக்கூடாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner