எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெய்ப்பூர் ஆக. 16 ராஜஸ் தான் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது, இந்த நிலையில் மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய பெயர் கொண்ட ஊர்களின் பெயரை அம்மாநில அரசு மாற்றி வருகிறது

பாஜக ஆளும் மாநிலங் களில் அமைந்துள்ள இஸ்லா மிய பெயர் கொண்ட ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வரு கின்றன.  சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முகல் சராய் ரயில் நிலையத்தின் பெயரை தீன் தயாள் உபாத்யாய் ரயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.   அந்த வரிசையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் பெயர் மாற்றும் நிகழ்வுகள் தொடங்கி உள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் ஊரின் பெயர் மியா ங்கெ பாராத்   இது இஸ்லாமியப் பெயர் என்பதால் அம்மாநில அரசு இந்த ஊரின் பெயரை மகேஷ் நகர் என மாற்றப் போகிறதாம்.  இது போல எட்டு ஊர்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப் புதல் அளித்துள்ளதாக ராஜஸ் தான் மாநில முதல்வ்ர் வசுந்தர ராஜே அறிவித்துள்ளார்.

இந்த பெயர் மாற்றங்களுக்கு அரசு இரு காரணங்கள் கூறப் படுகின்றன.  அதில் முதலாவது இந்த இஸ்லாமியப் பெயர் களை பல இந்து சமுதாய மக்கள் விரும்பவில்லை என்ப தாகும்.  அடுத்த காரணம் இந் தப் பெயர்களால் பலரும் இந்த ஊர்களில் இஸ்லாமியர்கள் மட்டுமே உள்ளனர் என நினைப்பதால் இங்குள்ள இந்து இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் திரு மணம் நடைபெறாமல் உள்ளது என்பதாகும்.

இந்த 8 ஊர்களைத் தொடர்ந்து மேலும் 27 ஊர்களின் பெயர்களை மாற்ற ராஜஸ்தான்  மாநில அரசுக்கு பாஜகவினரால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.   அந்த கோரிக்கைகளை மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு  ராஜஸ் தான் மாநில முதல்வர் வசுந் தரா ராஜே அனுப்பிள்ளார்.    இது வரும் தேர்தலில் இந்து மக்களின் வாக்குகளைக் கவர பாஜக செய்யும் திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட் டியுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner