எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஆக.20 கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து இது வரை 42 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் (அய்எம்டி) தெரிவித்துள்ளது.

கேரளாவில் பருவமழை தொடங்கிய ஜூன் 1ஆ-ம் தேதி முதல் நேற்று வரை (ஆகஸ்ட் 19) சரா சரியாக 2346.5 மி.மீ. மழை பெய் துள்ளதாக அய்எம்டி தெரிவித்துள்ளது.

இது வழக்கமான அளவை (1649.5 மி.மீ.) விட 42 சதவீதம் அதிகம். மாவட்டவாரியாக பார்க்கும்போது அதிகபட்சமாக இடுக்கி மாவட்டத்தில் 92 சதவீதமும், பாலக்காடு மாவட்டத்தில் 72 சதவீதமும் கூடுதல் மழை பெய் துள்ளது.

கேரளாவில் சராசரியாக பார்க்கும்போது ஜூன் மாதத்தில் 15 சதவீதமும் ஜூலையில் 18 சதவீதமும் ஆகஸ்டில் (19 வரை) 164 சதவீதமும் வழக்கத்தைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. இவ்வாறு அய்எம்டி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

பல்வேறு அரசுகள், நிறுவனங்கள் நிதியுதவி

கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பல் வேறு அரசுகள், நிறுவனங்கள், தனிநபர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி, டில்லி அரசின் சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் ரூ.25 கோடி, பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி, அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசின் சார்பாக சார்பில் ரூ.20 கோடி, குஜராத் அரசின் சார்பாக ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பாக ரூ.15 கோடி, பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி, மத்தியப்பிரதேசம் அரசின் சார்பில் ரூ.10 கோடி, மேற்கு வங்க அரசின் சார்பில் ரூ.10 கோடி, மணிப்பூர் அரசு சார்பில் ரூ.2 கோடி என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

அய்க்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள் கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.12.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளனர்.

யுஏஇ லுலு குழும தலைவர் யூசுப் அலி கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுபோல பாத்திமா ஹெல்த்கேர் குழும தலைவர் கே.பி. ஹுசைன் ரூ.5 கோடியும், யுனிமோனி தலைவர் பி.ஆர்.ஷெட்டி ரூ.2 கோடியும், ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் தலைவர் ஆசாத் மூப்பன் ரூ.50 லட்சமும் கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேர ளாவுக்கு தேவையான உதவிகள் செய்யப் படும் என யுஏஇ பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner