எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொச்சி, ஆக. 21   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கேரள மக்கள் அரசியல் வேறுபாடுகள் இல்லாமல் வெள்ளத்தால் ஏற்பட்ட துயரத்தை துடைக்க முயன்று வருகிறார்கள். ஆனால், சங்பரிவாரும், சேவாபாரதி எனும் அமைப் பும் அதற்கு கேடு விளைவிக்கும் செயலில் ஈடு பட்டுள்ளன.

துயரத்தை அனுபவிக்கும் கேரளத்துக்கு உதவக் கூடாது என அவர்கள் பிரச்சாரம் செய்து வரு கிறார்கள். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன் கொடைகள் வழங்கக் கூடாது என்கிற வார்த்தை களுடன் அவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். கேரளத்தில் சிபிஎம் ஊழியர்களும், ஆதரவாளர்களும் மீட்பு - நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர். கேரளத்தை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீட்க முதலமைச்சரின்நிவாரண நிதிக்கு அனைவரும் உதவ முன் வர வேண்டும். இவ்வாறு பிருந்தா காரத் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner