எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கர்நாடக அமைச்சர் அறிவிப்பு

புதுடில்லி, ஆக. 21- குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் பயிர்க் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று கர்நாடகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் பண்டெப்பா காஷெம்பூர் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல் வர் தேவராஜ் அர்சின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி, பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் அவரது உருவச் சிலைக்கு திங்கள்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறியது: அண்மையில் சட்டப்பேர வையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயனடைய முடியும் என்பதால் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த பலர் விவசாயக் கடனை வாங்கியிருந்தாலும், அவர்கள் அனைவரும் பயன டைய முடியும். மாநில அள வில் விவசாயிகள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner