எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 21  கேரளத்தில் ஏற் பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளை, அதிதீவிர இயற்கைப் பேரிடர்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதுதொடர்பாக அந்த அமைச்ச கத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

கேரளத்தில் கடந்த 10 நாள்களாக பெய்த கனமழையால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அதிதீவிர இயற்கைப் பேரி டராக' அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள மாநில அரசுக்கு தேசிய அளவில் உதவிகள் கிடைக்கும். தேசிய பேரிடர் உதவி நிதியத்திலிருந்து கூடு தல் நிதியுதவி அளிக்கப்படும்.

இதேபோல், பேரிடர் நிவாரண நிதி யம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் 3:1 என்ற அளவில் மத்திய அரசும் மாநில அரசும் பங்களிக்கும். இந்த நிதி போதாவிட்டால், மாநில அரசின் பங்களிப்பு இல்லாமல் மத்திய அரசே நிதியுதவி வழங்கும் என்றார் அந்த அதிகாரி.

முன்னதாக, கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற் பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளை, தேசியப் பேரிடராக அறிவிக்க வேண் டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதுதொடர்பாக கேரள உயர் நீதி மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, இயற்கை பேரழிவை, தேசியப் பேரிடராக அறிவிப்பதற்கு உரிய சட்ட விதிமுறைகள் இல்லை; தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கேரள வெள்ள பாதிப்புகளை அதிதீவிர இயற்கைப் பேரிடராக கருதி நடவடிக் கைகள் எடுக்கப்படும்' என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கேரளத்தில் திங்கள் கிழமை மழை சற்று ஓய்ந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீர மைப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வீடிழந்து தவிக்கும் மக்களின் மறு வாழ்வுக்கான பணி அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

மாநிலம் முழுவதும் 5,645 முகாம் களில் 7.24 லட்சம் பேர் தஞ்சமடைந் துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப் பட்டுவிட்ட நிலையில், எளிதில் அணுக முடியாத இடங்களில் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின் றனர். குறிப்பாக அதிக பாதிப்பைச் சந் தித்த ஆலப்புழை மாவட்டம், செங்கன் னூர் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற நிவாரணப் பொருள் களை விநியோகிக்கும் பணியும் தீவி ரமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ராணுவத்தின் தெற்கு பிராந்திய தலைவர் லெப்டி னென்ட் ஜெனரல் டி.ஆர்.சோனி கூறு கையில், மாநிலம் முழுவதும் சுமார் 1,500 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எளிதில் அணுக முடி யாத இடங்களில் தவிப்போரை கண் டறிய ஆளில்லா விமானங்கள் பயன் படுத்தப்படுகின்றன' என்றார்.

இதனிடையே, எர்ணாகுளம் மாவட் டம், பரவூர் பகுதியில் மேலும் 6 சட லங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 216-ஆக அதிகரித்திருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ வி.டி.சதீஸன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பரவூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பெரும் பாலானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். தற்போது புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, மக்களை மீண்டும் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங் கப்பட்டுள்ளன' என்றார்.

இதேபோல், மின் இணைப்பு மற் றும் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்து வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கேரள குடிநீர் ஆணையமும், மின் வாரியமும் தெரிவித்துள்ளன.

கொச்சி சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், அங்குள்ள கடற்படைக்கு சொந்தமான விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமான சேவை திங்கள்கிழமை தொடங்கியது. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து கப்பல் மூலம் அனுப்பிவைக் கப்பட்ட நிவாரணப் பொருள்கள் கொச்சி துறைமுகத்தை வந்தடையத் தொடங்கி யுள்ளன.

இதனிடையே, திருவனந்தபுரம், எர் ணாகுளத்தில் இருந்து ரயில் சேவைகள் பகுதியளவு தொடங்கப்பட்டுள்ளன.

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ள கேரளத்துக்கு நாடு முழுவதும் இருந்து நிதியுதவியும், பிற உதவிகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner