புதுடில்லி, ஆக. 21- கேரளா, வரலாறு காணாத மழையால் நிலைகுலைந்துள்ளது. வெள் ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கா னோர் பலியாகியுள்ளனர். லட் சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந் தியா மட்டும் அல்லாது பல் வேறு வெளிநாடுகளில் இருந் தும் கேரளாவுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து செய் யப்படும். வெள்ளத்தால் பாதிக் கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள தாக அவர் குறிப்பிட்டார்.