எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஆக. 23 புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு அடிப்படையில் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரி 16.8.2018 அன்று காலை 11 மணியளவில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உழவர்கரை நகராட்சி கழக தலைவர் சு.துளசிராமன் வரவேற்புரையாற்றினார். புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், புதுச்சேரி உள்ளிட்ட ப.க. துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராசன், வில்லியனூர் கொம்யூன் கழக தலைவர் கரு. சி.திராவிடச்செல்வன், புதுச்சேரி நகராட்சி கழக அமைப்பாளர் மு.குப்புசாமி, செயலாளர் த.கண் ணன், காரை.பெரியார் முரசு ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆர்ப்பாட்ட நிகழ்வை மாநில தலைவர் சிவ.வீரமணி நெறிபடுத்தினார். கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலைவாணர் நகர் களஞ்சியம் வெங்கடேசன், வாணரப்பேட்டை பெ.ஆதி நாராயணன், ப.க.செயலாளர் நெ.நடராசன், உழவர்கரை நகராட்சி கழக தலைவர் சு.துளசிராமன், புதுச்சேரி மாநில தலித் மக்கள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் சாமுவேல், பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தோழர் தீனா, மனித உரிமைகள் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் தோழர் இரா.முருகானந்தம், மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் தோழர் பஷீர்அகமது, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்ட மைப்பு தலைவர் தோழர் ஜீ.சு.சுவாமிநாதன், ஏஅய்எம்அய்எம் கட்சியின் மாநில தலைவர் சம்சுதின், புதுச்சேரி யூனியன் பிரதேச தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் தோழர் ராஜா, புதுச்சேரி சமூக நீதி பேரவை தலைவர் த.நவீன்தனராமன், புதுச்சேரி இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைப்பிரியன், புதுச்சேரி மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாநில முதன்மை செயலாளர் தோழர் தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் அ.மு.சலிம், மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்க மாநில அமைப் பாளர் தோழர் இரா.மங்கையர்செல்வம் ஆகியோர் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமுல் படுத்த வேண்டும் என திராவிடர் கழகம் எடுத்த நடவடிக்கைக்கு ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் தருவோம் என்று நீதிபதிகள் நியமனம் நடைமுறைபடுத்துதல் வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் உரையாற்றினார். முடிவில் ஆ.சிவராசன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் தலைவர் இரா.ஆதிநாராயணன், புதுச்சேரி நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் ஏ.அன்துவான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் மாநில செயலாளர் அமுதவன், அ.வீரசேகரன், கலைமாமணி வி.பி.மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner