எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.24- இந்தி யாவின் உள்நாட்டு உற்பத்தி 4 மடங்கு அதிகரித்த போதும், இந்தியர்களின் சம்பளம் மட்டும் 2 மடங்கு அளவிற்கே அதிகரித்துள்ளது என்று சர்வ தேச தொழிலாளர் அமைப் பான அய்எல்ஓ தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பான அய்.எல்.ஓ. ஆகஸ்ட் 20-ஆம் தேதி புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தி யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்தும், தொழிலாளர்களுக்கான ஊதியம் குறித்தும் பல்வேறு விவரங்களை அளித்துள்ளது. அந்த அறிக்கையில்தான், 1993&19-94 நிதியாண்டுக்கும் 2011&20-12 நிதியாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு மடங்குக்கும் மேலான வளர்ச்சியைக் கொண் டிருந்தும், இக்காலகட்டத்தில் தொழிலாளர்களின் ஊதியம் மட்டும் இரண்டு மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-&2012ஆம் ஆண்டில் இந்தி யாவில் சராசரி ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 247 என்ற அள விலேயே இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குறைபாடு மற்றும் ஊதியச் சமமின்மை இந்திய வளர்ச்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அய்எல்ஓ, இந்தியாவில் ஊதியம் வழங்குவதில், பாலின இடைவெளியும் இருக்கிறது; 1993&19-94ஆம் ஆண்டில் பாலின இடை வெளி 48 சதவிகிதமாக இருந்த நிலையில், 2011-&2012ஆம் ஆண்டில் அது 34 சதவிகிதமாகக் குறைந்துள் ளது என்பதையும் பதிவு செய்துள்ளது.திருத்தம்

நேற்றைய விடுதலையில் (23.8.2018) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையில், மூத்த தனி வழக்குரைஞர்களை வைத்து வாதாடி, 69 சதவிகித சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினைத் தடுத்திட உடனடியாக, அவசரமாக முன்வரவேண்டும்.  அலட்சியமாக இருக்கக்கூடாது. தேவைப் பட்டால் நாங்களும் இணைந்துகொள்ளத் தயார். (Implead) என்று ஆங்கில சொல்லைத் திருத்தி வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.

(ஆ-ர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner