எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லாலு மகன் தேஜ் பிரதாப்

பாட்னா, ஆக. 24- ராஷ்டிரிய ஜனதா தளக்கட்சியின் தலைவ ரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் தின் மகன் தேஜ் பிரதாப். இவர் பீகாரின் முன்னாள் அமைச் சராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில் பாரதீய ஜனதா தளக்கட்சி மற்றும் ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங் என்று கூறப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் என்னை கொல்ல சதித்திட்டம் தீட்டுகின்றனர் என தேஜ் பிரதாப் கூறியுள்ளார்.

பக்ரீத் பண்டிகையை முன் னிட்டு மக்களை சந்திக்க மஹ்வா தொகுதிக்கு சென்ற தேஜ் பிரதாப், செல்லும் வழியில் ஆயுதமேந்திய நபரால் தான் பாதிக்கப்பட்டதாக கூறியுள் ளார். இது குறித்து அவர் கூறு கையில், ஆயுதமேந்திய அந்த நபர் போலியாக நடித்து எனது கைகளை இறுகப்பற்றி கொண் டான், அவ்வாறு கைகளை பற்றி கொண்டவன் விடவே இல்லை. இது குறித்து நான் புகார் அளித்தும் இன்னும் கைது நடவடிக்கை மேற்கொள் ளவில்லை.

இங்கே எம்.எல்.ஏ-க்களுக் கும், எம்.பி-களுக்கும் பாது காப்பு இல்லாத நிலையில், மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பார்கள். கடந்த மாதம் எனது முகநூல் கணக்கை ஹேக் கிங் செய்த நபர்கள், குடும்பத் தில் பிளவு ஏற்படுத்துவதாக கூறி என்னையும் மிரட்டினர். இது குறித்து காவல்துறையி டம் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்த நிலையில், பீகா ரில் ஆட்சி புரியும் அய்க்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா தளம் கூட்டணி கட்சி கள் தள்ளுபடி செய்தன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner