எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அமைச்சரின் மனிதநேயம்(?)

கேரளவெள்ளப் பாதிப்பைதேசியப் பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என கேரள மாநிலத்தைச்சேர்ந்த மத்திய அமைச்சரான கே.ஜே.அல்போன்ஸ் கூறியுள்ளார்.

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் 300-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நிவாரண முகாம்களில் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் அம் மாநிலத்துக்கு பல தரப்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கேரள வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும் என காங்கிரசு, திராவிடர் கழகம் உள்பட பல்வேறு தரப்புகளிலிருந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இல் கேரள வெள்ளத்தை தேசியப் பேரிடர் என்று அறிவிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை'' என்று தெரிவித்தார்.

ஆகா என்ன மனிதநேயம்!'

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner