எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி

மும்பை, ஆக.25 மும்பையைச் சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று மாநிலத்தில் உள்ள சட்டவிரோத கோவில்களுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மராட்டியத்தில் 2009 ஆ-ம் ஆண்டு செப்டம்பர் 29- ஆம் தேதிக்கு பின்னர் கட்டப்பட்ட சட்டவிரோத கோவில்களை இடிக்குமாறு உத்தரவிட்டது. இதை ஏற்றுக்கொண்ட மாநில அரசு 2016- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் சட்டவிரோத கோவில்கள் இடிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.

ஆனால் குறித்த நேரத்திற்குள் அரசால் வேலையை முடிக்க முடியவில்லை. எனவே 2017- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் கோரியது. உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதுதொடர்பான வழக்கு தற்போது நீதிபதி ஓகா மற்றும் சோனக் அடங்கிய அமர்வு முன் நேற்றுமுன்தினம்மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில், சட்டவிரோத கோவில் களை இடிக்க மீண்டும் கால அவகாசம் கோரப் பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், கால அவகாசம் வழங்க மறுத்துவிட்டனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்,  அனைத்து சட்டவிரோத கோவில்களையும் ஏன் குறித்த காலத்திற்குள் இடித்து முடிக்கவில்லை என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்கவேண்டும். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும்.

அரசு தரும் விளக்கத்தில் திருப்தி ஏற்படா விட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்கு பின் ஒத்தி வைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner