எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாக்பூர், ஆக.25 கடும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டு களாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு பல் வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் இந்த சோக நிகழ்வுகள் தொடர்வதை தடுக்க முடியவில்லை.

விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2013 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் மராட்டிய மாநிலம் முதலிடம் பிடித்து உள்ளது.

அதன்படி இந்த 3 ஆண்டுகளில் மராட்டியத்தில் மட்டும் 11,441 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக கருநாடகா (3,740 பேர்) 2-ஆவது இடத்தையும், மத்திய பிரதேசம் (3,578 பேர்) 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் (1,606 பேர்) 8-ஆவது இடத்தில் உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner