எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புவனேஸ்வர், ஆக.26 ஒடிசா மாநிலத்தில் சட்ட மேலவை அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சர்  தலைமையில் குழு அமைக் கப்பட்டது. இந்த குழு பீகார், தெலுங்கானா, மாநிலங்களுக் குச் சென்று சட்ட மேலவை செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்தது. மகாராஷ்டிரா, கருநாடகா உள்ளிட்ட மாநிலங் களுக்கும் சென்று ஆய்வு செய் தது. பின்னர் சட்ட மேலவை தொடர்பான பரிந்துரை அறிக் கையை முதல்வர் நவீன் பட் நாயக்கிடம் கடந்த 3-ஆம் தேதி சமர்ப்பித்தது.

இந்நிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்ட மேலவை அமைப்பது தொடர்பான திட்ட முன்வடி வுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து வரும் செப்டம் பர் 4-ஆம் தேதி தொடங்க உள்ள சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், சட்ட மேலவை தொடர்பான தீர்மா னம் கொண்டு வந்து நிறை வேற்றப்பட உள்ளது.

இதுதொடர்பாக நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச் சர் ஆருக்கா கூறுகையில், இந்திய அரசியலமைப்பு சட் டப்பிரிவு 171 (1)-இன்படி மாநில சட்டமன்ற உறுப் பினர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மிகாமல் சட்ட மேலவையில் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். ஒடிசா சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 147 என்பதால் சட்ட மேலவை யின் மொத்த உறுப்பினர்கள் 49 ஆக இருக்கும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner