எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி/கொச்சின் ஆக. 26 கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளச் சேதத்திலும் மத்திய அரசும் இந்துத்துவா அமைப்புகளும் மதவெறியோடு நடந்து கொண்டது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேரள வெள்ளத்திற்கு இதுவரை ரூ.20,000 கோடி மதிப்பீடு செய்யும் வகை யில் சேதம் ஏற்பட்டுள்ளது.  உடனடியாக ஆயிரம் கோடி தேவை என்று அவசர கதியில் கேரளா கோரிக்கை விடுத்தது, ஆனால் கோரிக்கை விடுத்த அன்றே கேரளாவிற்கு வருகை தந்த மத்திய உள் துறை அமைச்சர் ராஜநாத் சிங்வெறும் 100 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிப்பை வெளியிட்டு விட்டுச் சென்று விட்டார். அதன் பிறகு வருகை தந்த மோடி ரூ.500 கோடியை தந்துவிட்டுச் சென்று விட்டார்;

ஆனால் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத், அசாம், பீகார் மாநிலங்களில்  மாநில அரசுகள் கேட்ட நிவாரண உதவித் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்கி உள்ளது. மேலும் அந்த மாநிலங்களுக்குச் சிறப்பு உதவிகள் வழங்க ஒரு குழுவும் அமைத் துள்ளது, ஆனால் கேரளாவிற்கு 600 கோடி ரூபாய் நிதி உதவியோடு நிறுத்திவிட்டது, தற்போது அதி தீவிர பேரிடர் என்று அறிவித்துள்ளது, இதன் காரணமாக மாநில அரசின் நிவாரணப் பணிகளை மத்திய அரசு கையில் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது, அப்படி எடுக்கும் பட்சத்தில் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பின்னணி கொண்ட அமைப்பு களையே நிவாரணப் பணிகளை மேற் கொள்ள நியமிக்கும், சமீபத்தில் ஏற்பட்ட உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவுகள் வழங்க இஸ்கான் (அரே ராமா அரே கிருஷ்ணா) அமைப்பு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பினரையே நியமித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் கேரளத்திலும் மதரீதியான பாகுபாடுகளைக் காட்டு வார்கள்.

பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரின் மதவெறிச் செயல்

அய்தராபாத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரும் பாஜக தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான சுரெஷ் கொச்சாட்டி என்பவர் கேரள வெள்ளம் தொடர்பாக ஒரு காணொலி ஒன்றை பதிய விட்டி ருந்தார், அதில் அவர் பேசியதாவது, கேர ளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்கள் அனைவரும் பெரும் பணக் காரர்களே! அவர்களுக்கு இந்த வெள்ள பாதிப்பு ஒரு பிரச்சினையே அல்ல, அவர் களின் குளியலறையில் அடைப்பு ஏற் பட்டிருக்கலாம். ஆகையால் குழாய் பழுது பார்ப்பவர் தேவைப்படலாம். அவர்களின் படுக்கையறையில் மின் விளக்குகளை பொருத்த மின் பணி யாளர்கள் தேவைப்படுவார்கள், இது ஒரு பெரிய வேலை இல்லை. ஆகவே யாரும் கேரளாவிற்குப் பணம் கொடுக்க வேண்டாம், வேறு எந்த வகையில் உதவியும் செய்யவேண்டாம். மேலும் கேரள அரசுக் குக் கொடுக்கும் நிதிஉதவி பணக்காரர்களின் வசதிக்காக செலவிடப்படும், அங்கு ஏழைகளுக்கு எந்த உதவியும் தேவையில்லை என்று பகிர்ந்துள்ளார். இவர் கேரளாவைச்சேர்ந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அய்தராபாத் நகருக்குக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது இந்த பதி விற்குக் கேரள மக்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாநிலமே கடுமையாகப் பாதிக்கப் பட்டு இருக்கும் போது கொஞ்சம் கூட மனிதாபிமானமின்றி இவ்வாறு பேசுவ தற்கு உங்களை வழிநடத்தும் அமைப்பே (ஆர்.எஸ்.எஸ்) காரணம், உங்களிடமிருந்து இதைத்தான் எதிர்ப் பார்க்க முடியும், என்று வெளி மாநிலங்களில் வாழும் கேரள மக்கள் தொடர்ந்து கண்டங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக உலகம் முழுவதும் நிதி திரட்டிவரும் ராஜீவ் மல்கோத்ரா என்ற பார்ப்பனர், கேரளாவிற்கு நிதி உதவி செய்யவேண்டாம் என்று நேரடியாகவே பதியவிட்டுள்ளார். மேலும் நீங்கள் கொடுக்கும் நிதி அனைத் தும் மதமாற்றத்திற்குச் செலவிடப்படும் என்று கூறி தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கிறித்தவ மதக்கூட்டம் ஒன்றின் வீடியோவைப் பதித்து கேரளத்தில் மத மாற்றம் பாரீர்! என்று ஒரு பொய்யான தகவலைப் பதியவிட்டுள்ளார்.

மோடி அமெரிக்கா செல்லும் போது அவருக்கான அனைத்து வசதி களையும் செய்யும் இந்துத்துவ பிரமுகர் களில் இவரும் ஒருவர், இவரும் சுப்பிர மணிய சாமியும் இணைந்து அமெரிக் காவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி திரட்ட தனி அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner