எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஆக.27- பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடி யின் படத்தைக் கட்டாயம் வைக்க வேண்டும் என்று பொதுத்துறை பெட் ரோலிய நிறுவனங்கள் வாய் மொழி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங் களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகி யவை பெட்ரோல் டீலர்களுக்கு இத்த கைய வாய்மொழி உத்தரவை வழங்கியுள்ளது.

இந்த உத்தரவு குறித்து இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.கோகி கூறும்போது, பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பெட்ரோல் நிலையங் களில் வைக்குமாறு உத்தர விடுகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு சப்ளை நிறுத்தப்படும் என்ற மறைமுக அச்சுறுத்தலும் விடுக்கப்படு கிறது என்று அதிர்ச்சித் தக வலை வெளியிட்டார்.பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் ஏரியா அதிகாரிகள் மூலம் இந்த உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. அதாவது வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு எல்பிஜி இணைப்பு வழங்கும் திட் டத்தை குறிப்பிட்டு, ஒரு படம் வைக்க வேண்டும் என்ற உத்தரவே அது. நிறுவனங்களின் பிராந்திய அதிகாரிகளிடமி ருந்தோ, விற்பனை அதிகாரி களிடமிருந்தோ எழுத்துப் பூர்வ மாக இது குறித்த உத்தரவு இல்லை என்கிறார் கோகி.

பெட்ரோல் நிலைய ஊழியர்களின் சுயவிவரம் கேட்பு

சமீபத்தில் பெட்ரோல் நிலை யங்களில் பணியாற்றுவோரின் சுயவிவரங்களை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கேட் டதாகவும் ஆனால் அதனை அளிக்க பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு மறுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஊழி யர்களின் சுயவிவரங்களை வைத்துக் கொண்டு அவர்களை ஜாதி, மதம் ரீதியாக பிரித்து கணக்கெடுக்க முடிவு எடுப்ப தாக எழுந்த சந்தேகத்தால் விவ ரங்களை அளிக்க மறுக்கப்பட் டுள்ளதாக சில டீலர்கள் தெரிவித்தனர். கடந்த ஜூன் மாதம் டீலர்களுக்கு ஒரு படிவம் அனுப் பப்பட்டுள்ளது. அதில், பாதுகாக் கப்பட வேண்டிய சொந்த விவ ரங்களான ஜாதி, மதம், ஊழியர் களின் தொகுதி ஆகியவை குறித்த விவரங்கள் கேட்கப் பட்டுள்ளன. இந்த விவரங்களை யார் கேட்டாலும் அது தனியுரி மையை மீறுவதாகும். ஆனால் அரசேகேட்கிறது. நாங்கள் நீதி மன்றம் செல்லவிருக்கிறோம் என்றார் கோகி. படிவத்தில் திருமணமானவரா இல்லையா, மொபைல் எண், தந்தை அல்லது காப்பாளர் பெயர், ஆதார் எண், மதம், ஜாதி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, அனுபவம், கல்வித் தகுதி ஆகியவையோடு வங்கி கணக்கு விவரங்களையும் கேட்டுள்ளது. இதனையடுத்து ஜூன் 11ஆ-ம் தேதி பெட் ரோலிய டீலர்கள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி இந்த முயற்சி அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். பஞ்சாபின் பெட்ரோல் நிலைய உரிமை யாளர்கள் கூட்டமைப்பு அய்.ஓ.சி.எல்., இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் மூத்த செய லதிகாரிகளுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளனர். ஆனால் பெட் ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் இது குறித்து கேட்ட போது, சுயவிவரங்களைக் கேட் டதை ஒப்புக் கொண்டனர். ஆனால் பிரதமரின் திறன் வளர்ப்பு அமைச்சகத்துக்காக அவற்றைக் கேட்டதாகத் தெரிவித்தனர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner