எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, ஆக. 27- வங்கி களில் வராக்கடன் விகிதம் உயர்ந்து கொண்டே செல்கிறது. விரைவில் மேலும் பல நிதி மோசடிகள் வெளிவர இருக் கின்றன என, மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வராக்கடன் விவகாரம் வங் கிகளுக்கு பெரும் தலைவலி யாக இருக்கிறது. மத்திய அரசு மூலதன நிதி வழங்கினாலும், வராக்கடனால் ஏற்பட்ட நிதிச் சிக்கலில் இருந்து வங்கிகளால் முழுமையாக விடுபட இயல வில்லை. பெரும் பணக்காரர் களுக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுத்த வங்கிகள், சிலரிடம் இருந்து அவற்றை வசூலிக்க முடியாமல் திணறி வருகின்றன. வங்கி வராக்கடன் தொடர் பாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா கூறியதாவது:

வங்கிகளின் வராக்கடன் விகிதம் 2014ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் 11.06 சதவீதமாக உயர்ந்து விட்டது. இது மிக வும் அபாயகரமானது. இவ்வாறு வராக்கடன் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது, வரும் காலங்களில் நிதி மோசடிகள் பல வெளிவர இருப்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன. வராக்கடன் தொடர்பான நடவடிக்கைக ளுக்காக ரிசர்வ் வங்கி பட்டிய லிட்டுள்ள 11 பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி, மேலும் பல வங்கி மோசடிகள் வெளியாகலாம். சமீபத்தில் பெறப்பட்ட ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி, 2014 ஆம் ஆண்டில் வராக்கடன் சுமார் ரூ.2.04 லட்சம் கோடி யாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் ரூ.10.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறு வனங்கள் பல நிதிப்பற்றாக் குறையால் தவிக்கின்றன. பல நிறுவனங்களுக்கு நிதியுதவி கிடைப்பதில்லை.  சிறிய மற் றும் பெரிய நிறுவனங்களிடையே இந்த ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது. இது சமன் செய்யப் பட வேண்டும் என்றார்.

கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இதுபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி சுமார் ரூ.13,000 கோடிக்கு மேல் மோசடி செய்தது நாடு முழு வதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யது. இந்நிலையில், மேற்கு வங்க அமைச்சரின் எச்சரிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner