எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஆக. 28- மகாராஷ்டிராவை சேர்ந்த முற்போக்கு சிந்தனையாளர் நரேந்திர தபோல்கரும், பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கே ஷும் ஒரே துப்பாக்கியால் சுட்டுக்கொல் லப்பட்டதாக புனே நீதிமன்றத்தில் சிபிஅய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நரேந்திர தபோல்கர் கடந்த 2013ஆ-ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்க ளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே பாணியில் கடந்த 2017ஆ-ம் ஆண்டு செப்டம்பர் 5ஆ-ம் தேதி கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்துத்துவா அரசியலை கடுமையாக விமர்சித்த இருவரும் ஒரே பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத் தியது.

இந்நிலையில் நரேந்திர தபோல்கர் வழக்கை விசாரிக்கும் சிபிஅய் அதிகாரி கள் முக்கிய குற்றவாளியான சுபம் சுரளியை கடந்த 11-ஆம் தேதி அவுரங் காபாத்தில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜனஜாக்ருதி சமிதி ஆகிய அமைப்பினருக்கு இந்தக் கொலை யில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

நரேந்திர தபோல்கரை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய 7.65 எம்எம் நாட்டு ரக துப்பாக்கியை தனது உற வினர் சச்சின் அந்துரேவிடம் கொடுத் ததாக தெரிவித்தார். சச்சின் அந்துரே அந்த துப்பாக்கியை சனாதன் சன்ஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அமோள் காலே விடம் கொடுத்துள்ளார். காலே, கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஆயுதம் வழங்கியதாக கர்நாடக சிறப்பு புல னாய்வு பிரிவு (சிஅய்டி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் சிபிஅய் அதிகாரிகள் சுபம் சுரளியை நேற்று முன் தினம் புனே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது தபோல்கரும் கவுரி லங்கேஷும் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ் வழக்கில் துப்பாக்கியை வழங்கிய சுபம்சுரளிக்கும், அமோள் காலேவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே இருவரையும் காவலில் எடுத்த விசா ரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஅய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நீதிமன்றம் சுபம் சுரளியை வரும் 30-ஆம் தேதி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. சிபிஅய் அதிகாரிகளின் இந்த தகவலை தொடர்ந்து கருநாடக சிஅய்டி அதிகாரி கள் பெங்களூருவில் உள்ள அமோள் காலேவிடம் விசாரிக்க தொடங்கி உள் ளனர். மேலும் அடுத்த சில தினங்களில் சிபிஅய் அதிகாரிகளும் பெங்களூரு வந்து காலேவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே இவ்வழக்கில் தலை மறைவாக உள்ள வேறு சிலரையும், தபோல்கரை கொல்ல பயன் படுத்திய இரு சக்கர வாகனத்தை யும் தேடி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner