எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூஜா பாண்டேவை கைது செய்க! உ.பி. எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

லக்னோ, ஆக. 29 அகில இந்திய முசுலிம் தனிச்சட்ட வாரியம் சார்பில் தாரூல் கசாஎனப்படும் ஷரீயத் நீதிமன் றங்கள் அமைக்கப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இசுலாமி யர்களின் ஷரீயத் முறைப்படி முசுலிம்களின் பிரச்ச னைகள் தீர்த்து வைக்கப்படும் எனவும், எனினும் இவை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்களுக்கு இணை யானவை அல்ல என்றும் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தாரூர் கசாவுக்கு போட்டியாக, மீரட் நகரில் இந்து நீதி மன்றம் அமைத்த இந்துமகா சபையினர், இந்த நீதிமன்றம்தூக்குத்தண்டனை வரை வழங்கும் என்றதுடன், பிரதமரையும் தண்டிப்போம் என்றனர். இந்து மகா சபையின் தேசிய செயலாளரும், சாமியாரி ணியுமான பூஜா சகுன் பாண்டே என்ப வரை நீதிபதியாகவும் அறிவித்தனர்.இது தொடர்பான சர்ச்சைகள் ஓயாத நிலையில், அலிகார் நகருக்குச் சென்ற பூஜா பாண்டே, மகாத்மா காந்தியை கோட்சே கொல்லாமல் விட்டிருந்தாலும், நான் அவரைக் கொன்றிருப்பேன் என்று கூறினார். கோட் சே-வின் தியாகத்திற்காக பெருமைப்படுவதாகவும், அவரை வணங்குவதாகவும் பூஜா பாண்டே கூறினார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், கண்டனத்திற்கும் உள் ளானது. இந்நிலையில்தான், மதநல்லிணக்கத் திற்கு எதிராக, விஷ வார்த்தைகளை உதிர்த்த பூஜாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி நிர்வாகியான சுனில் யாதவ் தற்போது வலியுறுத்தியுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதாகவே, பூஜாவின் பேச்சு உள்ளது. இவரை ஒரு விநாடியும் தாமதிக்காமல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று காங்கிரசு செய்தித் தொடர்பாளரான விஜேயந்திர திரிபாதியும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்து மகாசபை, சட்டத்திற்கு விரோத மாக அமைத்துள்ள இந்துநீதிமன்றம் குறித்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே பொது நல வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner