எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஆக.30 கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயார் என்று உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் கூறினர். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய தங் களுக்கு உதவ வேண்டுமென உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கேரள மாநில அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று உலக வங்கிக்கான இந்திய தலைமை அதிகாரி ஹிஷ்சாம் அப்து மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய தலைமை அதிகாரி கெஞ்சி யோக்கா யாமோ ஆகியோர் நேற்று திருவனந்தபுரம் வந்தனர். அவர்கள் இருவரும் கேரள நிதியமைச்சர் தாமஸ் அய்சக், தலைமை செயலாளர் டோம் ஜோஸ் மற்றும் அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்தினர்.தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயனையும் அவர்கள் சந்தித் தனர். பின்னர் அவர்கள் கூறிய தாவது: வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட கேரளாவை சீரமைக்க தேவையான அனைத்து உதவி களும் செய்ய தயார். அடிப் படை வசதிகளுக்கான பணி களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் தூய்மை திட்டம், வெள்ளத்தில் சேதமான சாலைகள், பாலங்களை சீர மப்பது, குடிநீர் திட்டங்கள் மற்றும் மின் நிலையங்களை சீரமைப்பதற்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும்.இதற்காக கேரள அரசிடம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இந்த அறிக்கையின்படி கடனுதவி அளிக்கப்படும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபோல் மத்திய நிதித் துறையினர் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேற்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசினர்.

பின்னர் முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: பம் பையில் ராணுவத்தின் ஒத்து ழைப்புடன் 3 தற்காலிக இரும் புப் பாலங்கள் அமைக்கப் படும்.

பம்பையில் சீரமைப்புப் பணி களை ஒருங்கிணைப்பதற் காக ஒரு மூத்த அய்.ஏ.எஸ்.  அதி காரி நியமிக்கப்படுவார். இவ் வாறு அவர் கூறினார். பம்பை யில் இனி கான்கிரீட் கட்ட டங்கள் கட்டக்கூடாது என்றும், பக்தர்கள் வரும் வாகனங்களை, நிலைக்கல் வரை மட்டுமே அனுமதிப்பது என்றும் கூட் டத்தில்  தீர் மானிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner