எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஆக.31 பாஜக தலைமை யிலான கூட்டணி அரசு அமைந்த பின்னர் மராட்டிய மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடைவிதிக்கப்பட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது கவ் சேவா ஆயோக் என்கிற பெயரில் பசு மாட்டுக்காக ஆணையம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

கால்நடைத்துறையின் ஒரு பிரிவாக பசு மாட்டுக்கான ஆணையம் செயல்படும் என்று மராட்டிய மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது. காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகின்ற கால்நடைகளை பாதுகாப்பதும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதையும், தன் பணியாக பசு மாட்டுக்கான ஆணையம் கொண்டிருக்கும் என்று கூறப் பட்டுள்ளது. பசுமாட்டின் மூத்திரம் அல் லது பசு மாட்டின் மூத்திரத்தி லிருந்து பையோகாஸ் எனும் இயற்கை எரிவாயுத் திட்டம் குறித்த ஆய்வை  மேற்கொண்டு, ஆய்வின் முடிவை அரசிடம் வழங்கும். கோசாலை  (கவ் சாலா) பசுப்பாதுகாவலுக்கான தொண்டர்களுக்கு பசு மாடு பராமரிப்புகுறித்த பயிற்சியை அளிக்கும் என்றும் கூறப் பட்டுள்ளது.

கால்நடை வளர்ச்சி மற்றும் தீவன உற்பத்தி வளர்ச்சி குறித்து பல்கலைக்கழகங்களில் திட் டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் புனே நகரைத் தலைமையகமாகக் கொண்டு பசு மாட்டு ஆணையம் இயங்கும். பசு மாட்டுக்கான ஆணையத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதுகுறித்து கால்நடைத் துறை முடிவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமான கால் நடைகளின் வளர்ச்சி, நலனுக் காக கால்நடைத் துறை செயல் படுகையில், பசு மாட்டுக்கென மட்டுமே தனி ஆணையம் அமைக்கப்படுகிறது என்றால், மதசார்பற்ற அரசு குறிப்பிட்ட மத நம்பிக்கைக்காக, பசு மாட்டை மட்டும் வேறுபடுத்தி, அதற்காக மட்டுமே தனியே ஓர் ஆணையத்தை அமைத்து, மத வாதத்தை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே பாஜக அரசு செயல்பட்டுவருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner