எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அதிர்ச்சிகர ஆய்வுத் தகவல்

பிறக்கும் குழந்தைகள் உயிரிழப்பு மற்றும் 5 வயதுக்குள் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுத்திட அரசு நிர்வாகங்கள் தீவிரமாக செயல்படவில்லை என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழில் (6.8.2018) ஆய்வுத்தகவல் வெளியாகியுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் பிறக்கும்போதே உயிரிழக்கும் குழந்தைகளின்  விழுக்காட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தி யாவில் சரிபாதி மாவட்ட நிர்வாகங்கள் செயல்படாமல் இருந்து வருவதாக அதிர்ச்சிகர ஆய்வுத்தகவல் வெளியாகியுள்ளது.

பிறக்கும் போதே உயிரிழக்கும் குழந்தை களின் (Neonatal Mortality) எண்ணிக்கையை குறைப்பதில் எட்டப்பட வேண்டிய இலக்கை விட பிறக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு 2.4 விழுக்காட்டளவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பன்னாட்டு செயல்முறை பகுப்பாய்வு நிறுவனம்

பன்னாட்டு செயல்முறை பகுப்பாய்வு நிறுவனத்தின் (International Institute for Applied Systems Analysis) சார்பில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் அய்ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு குறித்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாவட்ட அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆஸ்திரியாவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள அந்நிறுவனத்தின் சார்பில் ஜெயந்தா போரா, நந்திதா சாய்கியா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பன்னாட்டு சுகாதார நிறுவனத்தின் வளர்ச்சிக்கான (WHO-Sustainable Development Goal 3-SDG3) இலக்கு 3இன்படி, ஆண்டு ஒன்றுக்கு ஆயிரத்தில் 12 ஆக பிறக்கும் குழந்தைகள் உயிரிழப்பைக் குறைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அய்ந்து வயதுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்தில் 25க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள் மத்திய அரசின் தேசிய குடும்ப சுகாதார புள்ளிவிவரத் தகவலைப் பயன்படுத்தி, ஆய்வு மேற்கொண்டார்கள்.

15 முதல் 49 வயதுவரை உள்ள பெண்களின் பிறப்பு முதல் அவர்கள்குறித்த முழுமையான தகவல்களை சேகரித்தும், அதிக அளவில் 2015-2016ஆம் ஆண்டு மற்றும் 2005-2006ஆம் ஆண்டின் தகவல்களை முன்மாதிரியாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

வறுமையும், சிசுக்கள் உயிரிழப்புகளும்

அய்ந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் உயிரிழப்பைத் தடுப்பதற்கு தேவையான காரணங்களை ஆராயும்போது பல்வேறு அளவீடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. கடந்த 23ஆண்டுகளில் பாதியளவாக குறைந்திருப்பதைக் கண்டனர். 1990 ஆம் ஆண்டில் 1000 பேரில் 109 குழந்தைகள் உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2013ஆம் ஆண்டில் 50 குழந்தைகள் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனாலும், குறைவதற்கு பதிலாக இலக்கு நிர்ணயித்ததைவிட, இருமடங்காகவே உயிரி ழப்புகள் அதிகரித்திருந்தன. பிறக்கும்போதே உயிரிழக்கும் குழந்தைகள் விகிதம் 1000க்கு 29ஆக 2.4 மடங்கு அதிகரித்தது. உதாரணமாக, இந்தியாவில் டில்லியின் தென்மேற்கு மாவட்டங்களில் எஸ்டிஜி எனும் பன்னாட்டு சுகாதார நிறுவனத்தின் வளர்ச்சிக் கணக்கீட்டின் இலக்கின்படி, 1000 ஆண் குழந்தைகள் பிறந்தால், 6.3 பேருக் குள்ளாக உயிரிழப்பு இருந்த நிலையில், ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் 1000 குழந்தைகளில் 141.7 குழந்தைகள் எனும் எண்ணிக்கையில் இருந்துள்ளது. இந்தியா முழுவதுமுள்ள 9 மாவட்டங்களில் மட்டுமே பன்னாட்டு சுகாதார வளர்ச்சி இலக்கின்படி சிசு மரணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அய்ந்த வயதுக்குள்ளான குழந்தைகள் உயிரி ழப்பில் 14 விழுக்காடு எட்டப்பட்டுள்ளது.

செயல்படாத அரசு நிர்வாகம்

இந்தியாவில் பிறக்கும்போதே குழந் தைகள் உயிரிழப்பதைக் குறைக்க முடியாத நிலையிலேயே நாடுமுழுவதும் உள்ள சரிபாதி மாவட்ட நிர்வாகங்கள் உள்ளதாக ஆய்வுத்தகவல் சுட்டிக்காட்டி யுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கான இலக்கு 2030அய் எட்டும் வகையில், பிறக்கும் குழந்தைகள் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசு நிர்வாகங்கள் போதிய அளவுக்கு செயல் படவில்லை.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கையில் பன்னாட்ட ளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 11 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே உயிரிழக்கின்றனர்.

இந்தியாவின் வடக்கு, மத்திய மாநிலங்கள் மற்றும்  கிழக்கு மாநிலங்களில் அரசு நிர்வாகங்கள் மிகவும் மோசமாக உள்ளதால் பிறக்கும்போதே உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆந்திரப்பிரதேசம், குஜராத் போன்ற வளர்ச்சிபெற்ற மாநிலங்களில் பிறக்கும் குழந்தைகளின் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்டுள்ள மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து  மாவட்டங் களிலுமே பிறக்கும் குழந்தைகள் உயிரிழப் பைத் தடுப்பதற்கான பன்னாட்டு சுகாதார நிறுவன இலக்கு (எஸ்டிஜி3) எட்டப்படவில்லை.

குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் அய்ந்து வயதுக்குள் குழந்தைகள் உயிரிழப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான இலக்கு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே தென்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

குழந்தை பராமரிப்பில் சமூக, பொருளாதார மற்றும் புவியியல்,

பாலியல் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள்

குழந்தை பராமரிப்பில், பிறக்கும் குழந்தைகள் உயிரிழப்பதற்கான காரணிகளாக சமூக, பொருளாதார, புவிசார் அடிப்படைகள் மட்டுமல்லாமல் பாலியல் அடிப்படையிலும் வேறுபாடுகளுடன் உள்ளன. பிறக்கும்போதே உயிரிழக்கும் குழந்தைகளில்  ஆண்குழந்தை களின் எண்ணிக்கையைவிட பெண்குழந்தை களின் குறைவாகவே உள்ளது. இது பன்னாட்டளவில் உள்ள நிலையை பிரதிபலித்துள்ளது. ஆனால், அய்ந்து வயதுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பாலியல் பாகுபாடுகள் உள்ளன. மாநில அளவிலான குழந்தைகள் உயிரி ழப்பு விகிதத்துடன், மாவட்ட அளவிலான விகிதம் ஒப்பிடுகையில் வேறாகவே உள்ளது. சில மாநிலங்களில் சில மாவட்டங்களில் மட்டும் எட்டப்பட வேண்டிய இலக்கு (எஸ்டிஜி3) 15ஆண்டுகளுக்கு முன்னதாகவே  எட்டப்பட்டுள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் 2030ஆம் ஆண்டுக்குள்ளாக எட்டப்பட வேண்டிய இலக்கு எட்டப்பட வில்லை. ஒரே மாநிலத்தில் மாவட்டங்களில் குழந்தைகளின் உயிரிழப்பு விகிதங்கள் வெவ்வேறாக உள்ளன.

2005ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் குழந்தைகள் உயிரிழப்பு என்பது இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பன்னாட்டளவில் சுகாதார நிறுவனத்தால் குழந்தைகள் உயிரிழப்பைக் குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட (எஸ்டிஜி3) இலக்கில் மாவட்ட அளவில் எட்டப்படவேண்டிய இலக்கு எட்டப்படவில்லை. மேலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலைதான் இருந்துவருகிறது.

இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகள் உயிரிழப்பு  (ழிமீஷீஸீணீணீறீ விஷீக்ஷீணீறீவீஹ்) மற்றும் அய்ந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கையை தீவிரமாக அரசுகள் முன்னெடுக்க வேண்டிய நிலை உள்ளது.

பெண்கல்வி

சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், புவியியல் ஏற்றத்தாழ்வுகளால் வேறுபாடுகள் இருந்து வருகின்றன. நகர மயமாக்கல் 100 விழுக்காடு எட்டப்படுகின்ற அதேநேரத்தில் மாவட்ட அளவிலான பெண்களின் கல்வி யறிவு 24 முதல் 89 விழுக்காடாக உள்ளது. சுகாதார நல்வாழ்வை எட்டுவதற்கான திட்டங்கள் இல்லை. அப்படியே தற்பொழுது இருக்கின்ற திட்டங்களும் மக்களைச் சென்றடைவதில்லை. அதனால் குழந்தைகள் உயிரிழப்பைக் குறைப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்  பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன.

இவ்வாறு ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வுத்தகவல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner